About Us

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு சபைசார்பாக என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். புதுக்கோட்டை A.G சபை சரித்திரத்தை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

 • முதல்நிலை

 • இரண்டாம்நிலை

 • மூன்றாம்நிலை

முதல்நிலை:-

1990 ஆண்டு மறைந்த போதகர் சங்கை K.C ஆன்ருஸ் அவர் மண்டல தலைமைப் போதகராய் இருந்தகாலத்தில் என் தகப்பனார் Rev. S. ஜாண்சன் அவர்கள் இந்த புதுக்கோட்டையில் ஊழியத்தை ஆரம்பித்தார்கள். ஆரம்பித்த நாட்களில்A.G சபைக்கு என்று ஒரு விசுவாசியும் இல்லை. எந்த வீடும் இருந்ததில்லை. மின்சாரம் இல்லாத வீட்டில் சுமார் 6 மாதம் இருந்து ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார்கள். 4 மாதங்கள் அந்த வீட்டில் வசித்துவந்தோம். எங்களை ஜெபித்து ஆசீர்வதித்து அனுப்பிய போதகர் தேவப்பிச்சை(ஆறுமுகநேரி) தேவன் உங்களை அந்த ஊரில் ஆசீர்வதித்து உயர்த்துவார் என்று அனுப்பிவைத்தார்கள். 1990 முதல் 1996 வரை என் தகப்பனார் மற்றும் நாங்கள் எங்கள் குடும்பமாக பலபாடுகள், நிந்தைகள் ,அவமானங்கள் வழியாக கடந்து சென்றோம். பல வீடுகள் மாற்றவேண்டிய சூழ்நிலை வந்தது. 6 ஆண்டு கால ஊழியங்கள் எங்களுக்கு அஸ்திபாரமாக அமைந்தது. பலநேரங்களில் வேறு இடங்களுக்கு சென்று விடலாம் என்றிருந்தோம், ஆனாலும் தேவகிருபை, அந்த 6 வருடங்களில் மகிமையான காரியங்களை தேவன் செய்தார் .

 • 10 சென்ட் இடம் ஆலயத்திற்கு வாங்கப்பட்டது.

 • சுமார் 40 பேர் சபை விசுவாசிகள் ஆனார்கள்.

 • நான் 1990 ஏப்ரல் 9ம்தேதி இரட்சிக்கப்பட்டேன்.

 • 1993-1996 வரை மதுரை வேதாகமாக் கல்லூரியில் படித்துபட்டம் பெற்றேன்.

 • 1996 சில காலம் Rev.A.ஆபிரகாம்தாமஸ் அவர்களிடம் உதவி ஊழியக்காரனாய் இருந்தேன்.

 • 1996ல் நிர்வாக குழுவினரால் புதுக்கோட்டை சபையைப் பொறுப்பு எடுத்தேன்.

 • 1996 ல் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

 • 1996 ல்பழைய இடம் 10 செண்டு விற்கப்பட்டு சபைக்கு புதிய இடம் வாங்கப்பட்டது

 • அந்த 6 வருடங்களில் 3 தடவை ஆராதனைகளுக்காக போடப்பட்ட (ஷேட்) கூடாரம் காற்றினால கீழே விழுந்தது .

 • அந்த 6 வருடங்களில் 30 பேர்ஞானஸ்நானம் பெற்றனர் .

தேவன் எனக்கு தந்த தாய், தந்தை மற்றும் சகோதரன் ,சகோதிரிகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

இரண்டாம்நிலை :1997-2004 :-

இந்த காலகட்டத்தில் சபை எண்ணிக்கை அளவிலும் ஆவிக்குரிய தரத்திலும் வளர ஆரம்பித்தது. சபைக்காக வாங்கப்பட்ட இடத்தின்மேல் சிலர் வழக்கு தொடந்தனர். ஆகவே ஆலய வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை. ஓலை கூடாரத்தில் ஆராதனை நடைபெற்று வந்தது. இந்த கால கட்டத்தில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் சபைக்குவர ஆரம்பித்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும் சபை வளர்ந்து கொண்டே இருந்தது .1997 ம் ஆண்டு எனது திருமணம்நடைபெற்றது. ஏற்ற துணையை தேவன் தந்தார் .2000 ம் ஆண்டில் புதிய இடத்திற்கு ஆராதனை மாற்றப்பட்டது. கூடுதலாக 5 செண்ட் இடமும் வாங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் கல்லறை தோட்டத்திற்கு என்று 10 செண்ட் நிலம் வாங்கப்பட்டது. புதிதாக நாங்கள் சுதந்தரித்த 15 செண்ட் இடத்தில் ஆலயம் கட்டவும், சிறுவர் ஆராதனை கூடம் குடியிருப்புக்கு 15 செண்ட் இடத்தில் ஆலயம் கட்ட பரிசுத்த ஆவியின் உதவியுடன் செயல்பட்டோம். தேவன் அதை கிருபையாக வாய்க்கச் செய்தார் .21 X 80 என்ற அளவில் அஸ்பெட்டால் கொண்டு செட்போடப்பட்டது. புயல்காற்றில் அந்த செட் இடிந்துவிழுந்தது. நாங்கள் சிறிய காயத்துடன் உயிருடன் தப்பினோம். தேவ கரம் எங்களை காப்பாற்றியது. இத்தோடு புதுக்கோட்டை எழுப்புதல் சபையின் ஊழியங்கள் முடிந்தது என பலர் பேச ஆரம்பித்தனர். ஆனால் விசுவாசிகள் கொஞ்சம் கூட பின்வாங்கவில்லை. உடனே பந்தல் போடப்பட்டு ஆராதனை நடைபெற்றுவந்தது. அதே இடத்தில் மறுபடியும் ஆலய வேலை ஆரம்பிக்க ஆவியானவரால் ஏவப்பட்டபடியால் ஒரு ஆண்டு கடந்துரூ .15,000.00 திட்டத்தில் ஆலயகட்டுமான வேலை ஆரம்பிக்கப்பட்டது. தேவ கிருபையால் எந்தகடனும் இல்லாமல் 2004 ல் ஆலயம் Rev.ராஜாமணி அவர்கள் தலைமையில் பிரதிஷ்டையில் பங்கெடுத்தது சிறப்பானது.

மூன்றாம்நிலை :2004 - 2015:-

ஆலய பிரதிஷ்டை முடிந்து சபை வளர்ச்சி திட்டங்கள் திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தோம். புதியஊழியங்களும் ,கிளைசபைகளும் ஆரம்பிக்கப்பட்டது. பராமரிப்புக்குழுக்கள் ஆரம்பிக்கபட்டபடியால் பல தலைவர்கள் எழும்பி செயல்பட வழிவகுத்தது.

3 ஆராதனைகள் காலையிலும் மாலை 1 ஆராதனை என்ற நிலையில் சபை வளர்ந்து பெருக ஆரம்பித்தது. புதுக்கோட்டையும் அதை சுற்றியுள்ள 45 கிராமங்களில் இருந்து ஜனங்கள் சபைக்கு வர ஆரம்பித்தனர். ஆலயம் இருந்த அந்த பகுதி சந்தோஷநகர் என்று பெயர் வைக்கதேவன் உதவிசெய்தார் .இந்நாள் வரை அது சந்தோஷ நகராகவே உள்ளது.

சபை பெருக ஆரம்பித்தபடியால் இட நெருக்கடி மற்றும் சுற்றிலும் உள்ள ஜனங்களால் பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது. சபையாக தேவனை நோக்கி கதறினோம். உபவாச நாட்கள் நியமிக்கப்பட்ட்து. ஜெபத்தை கேட்ட தேவன் தற்போது உள்ள இந்த ஊழியத்திற்கு பரிசுத்தபர்வதம் என்ற பெயரைதந்தார். பரிசுத்தபர்வதம் என்ற தரிசனத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தோம். தேவன் கிருபையாக மெயின்ரோட்டில் 50 செண்ட் இடம் வாங்க உதவிசெய்தார். 25 இலட்ச்சத்திற்கு இந்த இடம் 2010 வாங்கப்பட்ட்து. வாங்கப்படட இடத்தில் 20 இலட்ச்சம் செலவில் கோட்டை சுவர் (மதில்சுவர்) மற்றும் 3082 என்ற அளவில் செட்போடப்பட்ட்து. வசதிகள்செய்யப்பட்டது. பரிசுத்தபர்வதம் சபை போடப்பட செட்டில் ஞாயிறுதோறும் 4 ஆராதனைகள் நடைபெற்றது. ஐடா நெருக்கடியும் ஏற்பட்டது. சபையாக ஜெபித்தோம்.4 வருடங்களாக தேவன் ஆலோசனைக் காககாத்திருந்தோம். 2014 ஜூன்அன்று 3 கட்டமாக வேலையை ஆரம்பிக்க தேவன் சொன்னார். எனவே விசுவாசத்ததுடன் வேலை ஆரம்பிக்கப்பட்டு 50X 140 பால்கனி ஆக 8700 சதுர அடி திட்டத்தில் வேலை ஆரம்பிக்கப்பட்டது . ஜெபமும் வேலையும் மாறிமாறி நடந்துகொண்டே இருந்தது.

தேவ கிருபையால் எந்த தடையும் இல்லாமல் வேலைகள் நடைபெற்று வந்தது. வந்த எல்லா வகை தடைகளையும் யோபு42:2ன் படி தேவன் மாற்றினார். விசுவாசிகளின் ஜெபமும் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. தாராளமாக கட்டுமானத்திற்காக கொடுத்தனர். தற்போது 1,47,000,00 (ஒருகோடியே47லட்சம் ) திட்டத்தில் இந்த ஆலய வேலையை நிறைவு செய்ய தேவன் கிருபை செய்தார். தேவனுக்கே மகிமை சுமார் 1200 பேர் ஞாயிறு ஆராதனைக்கு வருகின்றனர்.

ஜூன்11 தேதி ஆலய பிரதிஷ்ட்டைக்கு பின்பு ஞாயிறுதோறும் 4 ஆராதனைகள் நடைபெற்றுவந்தது .எல்லா ஆராதனையிலும் புதிய ஜனங்கள் வர ஆரம்பித்த்தானர்.

 • தற்போது ஆரம்பிக்கப்பட்ட கிளை சபைகள் 5

 • விசுவாசிகளின் எண்ணிக்கை 2000

 • பராமரிப்பு குழுக்கள் எண்ணிக்கை 170

 • 90 இடங்களில் சிறுவர் ஊழியம்

தேவ கிருபையால் இவ்வாறு ஊழியம் வளர்ந்து பெருகிவருகிறது. தொடர்ந்து எங்களுக்காக ஊழியங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.