Village Minstry

புதுக்கோட்டையை சுற்றி 55 கிராமங்கள் உள்ளன. ஞாயிறுதோறும் மாலை 4:00 - 6:30 வரை சபையில் இருந்து ஒரு பொறுப்பாளர் தலைமையில் குழுவாக வாகனத்தில் சென்று தனிப்பட்ட முறையில் ஜனங்களை சந்தித்து இரட்சிப்புக்குள் நடத்துகின்றனர். மாதம் ஒரு கிராமம் தத்தெடுக்கப்பட்டு அந்த மாதம் முழுவதும் அங்கே பலவகையான ஊழியங்கள் நடைபெற்றுவருகிறது .இந்த ஊழியத்தின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் .

Magazine Minstry

இந்த பத்திரிக்கை ஊழியம் கடந்த 18 வருடங்களாக மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை ஊழியம் தற்போது 16 பக்கங்கள் கொண்ட "பரிசுத்த பர்வதம்" செய்தி மலராக முன்னேற்றம் கண்டுள்ளது .தற்போது தேசத்தின் பல இடங்களுக்கும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவருகிறது. இந்த பத்திரிக்கை ஊழியத்தின் மூலமாக அநேகர் அறிந்து விடுதலை பெற்று வருகின்றனர் .

Missionary Minstry

நமது சபையின் மூலமாக 17 மிஷனெரிகளும் 2 ஆதரவற்ற பிள்ளைகளும் மாதம்தோறும் தாங்கப்பட்டு வருகிறார்கள் .மொத்தம் மாதம் தேவை ரூ.62,000 /-அனுப்பப்பட்டு வருகிறது ஒவ்வொரு மிஷனெரிக்கும் மாதம் ரூ.4,000 /- அனுப்பப்படுகிறது . அது மட்டுமல்லாமல் மிஷனெரிகளுக்காக சபையில் சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறது. டிஜிட்டல் போடு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநில வரைபடம் மற்றும் இதர குறிப்புகள் ஜனங்கள் பார்க்கிற இடத்தில் வைக்கப்பட்டு, மிஷனெரி ஊழியத்தை குறித்த பாரம் ஜனங்களுக்குள் தூண்டிவிடப்படுகிறது. வருகிற நாட்களில் இன்னும் அநேக மிஷனெரிகளை தாங்க வேண்டும் என்ற தரிசனத்துடன் சபை திட்டங்களை தீட்டிவருகிறது

T.V Minstry

மிக எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விடுதலை நேரம் ஊழியம் தற்போது 9 சேனல்களில் 13 இடங்களில் இருந்து ஒளிபரப்பப்படுகிறது. மாதந்தோறும் ரூ.1,25,000 /- இந்த ஊழியத்திற்க்காக செலவிடப்பட்டுவருகிறது. இலட்சக்காண ஜனங்கள் விடுதலை நேரம் நிகழ்ச்சியை பார்த்து ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் Mail அனுப்புவார்கள். சிலர் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் சாட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

  • தமிழன் T.V புதன்தோறும்மாலை 7:30

  • Cross T.V ஞாயிறுதோறும்காலை 7:00

  • Cross T.V ஞாயிறுதோறும்காலை 7:00

  • God's Power T.V தினமும்இரவு 8:30

  • லீபனோன் T.V தினமும்இரவு 7:30

Counselling Minstry

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10:00 வரை நானும் எனது மனைவியும் உபவாசத்துடன் வருகிறவர்களுக்கு ஜெபிப்பது மட்டுமல்லாமல் நேரம் எடுத்து அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். இப்படிசெய்வதால் அநேகருடைய பிரச்சனைகள் மாறி வருகிறது. அது மட்டுமல்லாமல் அநேக அற்புதங்களையும் தேவன் செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 நபர்களாவது வந்து ஆலோசனை பெற்று ஜெபித்து செல்கின்றனர்.

நீங்கள் போதகரை நேரில் சந்தித்து ஜெபிக்க வேண்டுமா பலவிதமான வியாதியிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெறவும், உங்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10:00 முதல் மதியும் 1:00 மணிவரை Rev.Jசாமுவேல் ஜெபராஜ் அவர்களிடம் சபைக்கு வந்து ஜெபித்து செல்லுங்கள். உங்களுக்காக போதகர் அவர்கள் உபவாசத்துடன் ஜெபிக்க காத்திருக்கிறார்கள .போன் : 0461-2271757.

Hospital Minstry

மாதம் ஒரு முறை சபையிலிருந்து ஒரு குழுவாக வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபம் செய்துவருகின்றனர் மற்றும் புதிய ஏற்பாடுகள் அவர்களுக்கு கொடுத்து வாசிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இந்த ஊழியத்தின் மூலமாக அநேகர் சுகம் பெறுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து சபை ஐக்கியத்திலும் பங்கு பெற்றுவருகின்றனர்

Prayer Walk Minstry

மாதம் ஒரு முறை பராமரிப்புக் குழுக்கள் நடைபெறுகிற இடங்களில் அந்தந்த பராமரிப்புக் குழு நடத்துகிற தலைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலமாக அந்த அந்தந்த பகுதியில் ஜெபித்து கொண்டே நடந்து அந்த பகுதியை சுற்றி வருதல், இதன் மூலமாக அந்த பகுதியில் கிரியை செய்கிற அந்த காரவல்லமைகள் முறியடிக்கப்படுகிறது.

Children's Minstry

கர்த்தருடைய பெரிதான கிருபையால் சபையின் சிறுவர் ஊழியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஞாயிறுதோறும் 3 சிறுவர் ஆராதனைகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல 83 இடங்களில் சிறுவர் கூட்டங்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வருடத்திறகு ஒரு முறை (விடுமுறைவேதகாமப்பள்ளி )சிறப்பாக செயல்படடு வருகிறது. அநேக சிறு பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின்அ பிஷேகத்தை பெற்றுவருகின்றனர்.

Carecell Minstry

கர்த்தருடைய பெரிதான கிருபையால் சபையின் சிறுவர் ஊழியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஞாயிறு தோறும் 3 சிறுவர் ஆராதனைகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல 83 இடங்களில் சிறுவர் கூட்டங்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வருடத்திறகு ஒரு முறை (விடுமுறை வேதகாமப் பள்ளி ) சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அநேக சிறு பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின்அபிஷேகத்தை பெற்று வருகின்றனர்.

Follow UP Minstry

சபையின் மூலமாக நடைபெறுகிற எந்த ஊழியமாக இருந்தாலும், அதன் மூலமாக இரட்ச்சிக்கபடுகிறவர்கள் தொடர்ந்து சந்திக்கப்பட்டு உற்சாகப்படுத்தபட்டு சபை ஐக்கியத்தில் இணைக்கப்படுவதற்கு இந்த ஊழியம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது.

  • 1.புதிதாக ஆராதனைக்கு வருபவர்கள்.

  • 2.தொலைபேசி ,கடிதம் மூலமாக தொடர்பு கொள்பவர்கள்.

  • 3.சபையில் நடைபெறுகிற சிறப்பு கூட்டங்கள் மூலம் தொடப்படுகிறவர்கள்.

  • 4.பராமரிப்புக் குழுக்கள் மூலமாக முகவரிகள் பெறப்பட்டு, முதலாவது இவர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. பின்னர் தலைவரோ அல்லது உதவி ஊழியர்களோ அல்லது பராமரிப்பு குழுதலைவர்களோ இவர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதன் மூலமாக அநேகர் சபையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனை முடிந்த பின்பும் புதிதாக வருபவர்களுக்கு எண்ணெய்பூசி ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது

Helping Hand Minstry

சபையிலும் சபைக்கு வெளியிலும் வறுமையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் வருபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

  • 1.வேலை செய்வதற்கு உபகரணங்கள் வாங்கி கொடுத்தல்.

  • 2.கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு Fees மற்றும் Uniform எடுத்து கொடுத்தல்

  • 3.சிலருக்கு வீட்டு வாடகை கொடுத்தல்.

  • 4.மருத்துவ உதவி செய்தல்.

  • 5.விதவைத் தொகை கொடுத்தல்.

  • 6.எளிய முறையில் திருமணம் நடத்தி வைத்தல்.

  • 7.உடைந்த வீடுகளை பழுது பார்த்து கொடுத்தல்.

Prayer War Minstry

வருடத்திற்கு 2 முறை வாஞ்சையுள்ள சிலரை தெரிந்துகொண்டு வாகனங்கள் மூலமாக புதுக்கோட்டையும் அதை சுற்றியுள்ள 55 கிராமங்களையும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுற்றி வந்து ஜெபித்தே இந்த ஜெப யுத்தம் ஆகும்.

சில முக்கியமான இடங்களில் வாகனத்தை விட்டு இறங்கி அந்த பகுதிக்காக சிறப்பு ஜெபமும் ஏறெடுக்கப்படும். பெரும்பாலும் வாகனத்தில் அமர்த்திருந்தே அங்கே கிரியை செய்கிற அசுத்த ஆவிகளை கட்டி ஜெபிப்பது வழக்கம்.

இந்த ஜெப யுத்தத்தின் மூலமாக பிசாசின் கையிலிருக்கிற ஜனங்கள் விடுதலையாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஜெபத்தை செய்த பின்பு ஜெபித்த இடங்களில் ஆவியானவருடைய கிரியையை பார்க்க முடிகிறது.

Students For Christ Minstry

மாணவர்கள் மத்தியில் நிச்சியமாக இந்த ஊழியம் தேவை என்பதை உணர்ந்து சில ஆண்டுகளாக இந்த ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். இதற்கு பொறுப்பாக 5 கல்லூரிகளில் 1 பள்ளிகூடத்தில் தற்போது இந்த ஊழியங்கள் நடைபெற்றுவருகிறது. வாரம்தோறும் கூடிஜெபித்தல் மற்ற மாணவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பரீட்சை நாட்களில் அவர்களுக்காக சிறப்புபிராத்தனை ஏறெடுக்கப்படுகிறது.

Network Minstry

இந்த Network ஊழியத்தின் மூலமாக உங்களை அனுதினமும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அனுதினமும் வேதவசனம் இதிலே போடப்படுகிறது. உங்கள் ஜெபத் தேவைகள் மற்றும் உங்கள் பிரச்சனைகளுக்காகவும் நேரடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு ஜெபமும் தக்க ஆலோசனையும் வழங்கப்படும். நீங்கள் பெற்ற நன்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.