சிறுவர் பகுதி

நிலைத்திருங்கள்

அரண்மனையை ஒட்டிய பகுதியில் பிச்சைக்காரன் ஒருவன் வசித்துவந்தான். ஒரு நாள் அரண்மனை கதவில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டதை க்கண்டான். அதில் மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன்தான் உடுத்திய உடையில் நிச்சயம் அரண்மனைக்கு போக முடியாது என்று நினைத்தான்.

அவனுக்குள் ஒர் எண்ணம் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போது அவனுக்கு நடுக்கம் வந்தது. இருந்தாலம் தைரியத்துடன் அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அந்தகாவலன், அரசரிடம் அனுமதி வாங்கிவந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம் என்னைப்பார்க்க வேண்டும் என்றாயோ? என்றார். அரசர் !!ஆமாம் !நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ள எனக்கும் ஆசை. ஆனால் என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடைகளை அளித்து உதவுனால், அதனை அணிந்துவிருந்துக்கு வருவேன் என்று மிகவும் பவ்வியமாக கூறினான். அதே நேரம் மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர்,அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான். தோற்றதில் கம்பீரம் மிளிர்வதைக்கண்டு வியந்தான்.அப்போது மன்னர் அவனிடம் விருந்தில் கலந்துகொள்வதற்கு தகுதி உடையவனாகிவிட்டாய். அதைவிட முக்கியமான ஒன்று இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப்படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப்படுத்தவோ அவசியம் இருக்காது என்றார். கண்ணீர் மல்க மன்னருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினான். மூலையில் கிடந்ததனது பழைய ஆடையைக் கவனித்தான். அவனது மனம் சற்றேசலனப்பட்டது. ஒருவேளை அரசர் கூறியது தவறாக இருந்தால் என்று நினைத்து பழைய ஆடைகளையும் சுமந்தேதிரிந்தான். இதனால் அவனால் ராஜவிருந்தை சரியாக உண்ணமனமமில்லை. இதனால் அவனைக் கந்தல் பொதிகிழவன் என்று அழைத்தனர். இந்த கந்தல் மூட்டையால் அவனது வாழ்க்கையில் மொத்த மகிழ்ச்சியும் பறிபோய்விட்டது. அதைப் போல் நம் எல்லோரிடமும் அப்படியோரு மூட்டை இருக்கிறது. அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பொறாமை,பகைமை எனப் பலபெயர்களில் வேண்டாத பொருட்கள் உள்ளன. நாமும் வருகிற 2018 ஆம் ஆண்டில் அந்த பழைய கந்தல் மூட்டைகளைக் களைத்து, நம் இயேசப்பா கொடுக்கிற ராஜ உடை ஆகிய பரிசுத்தம், நித்திய வாழ்வு என்ற மகிழ்ச்சியை சுதந்தரித்து க்கொண்டு சந்தோஷமாக இருப்போம் என்று கூறி மறுபடியும் புத்தாண்டு வாழ்த்தைக் கூறி விடைபெறுகிறேன்.

தலைப்பு :முயற்சி செய்

பொறுப்பு ராஜன்

இயேசுவின்நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்

கொட்டும் பனியிலும் குளிரிலும் போர்வையை களைத்து விட்டு சிறுவர்பகுதியை வாசிக்கும் சிறுவர்களே ,

சுறுசுறுப்பான பையன் சின்னா, அவன்எப்பவும் சந்தோஷமாயிருப்பான். ஆனால் அவன் பிறந்தநாள்அதுவும் மாலை நேரத்தில் ரொம்பசோகமாக வீட்டு வாசலில் உட்காந்திருந்தான்.அவனோட அம்மா அவன்கிட்டவந்து "ஏன்டா சின்னா,பிறந்தநாள்அதுவுமா ஏன் சோகமா இருக்க"அதற்கு சின்னா, அவங்க அம்மாகிட்ட,இன்னைக்கு எங்க ஸ்கூல்ல எங்கடீச்சர் என்ன ரொம்ப திட்டிட்டாங்கம்மா.என் Hand Writing நல்லா இல்லேனு சொல்லிஎன்ன திட்டிட்டாங்கம்மா.உடனே அவனுடைய அம்மா,சின்னா இதுக்குத்தான் இவ்ளோ சோகமா இருக்கிறியாங்கோ!ம்ம்ம்....நீ நம்ம வீட்டுலஇருக்கிற இந்த கிளியை கொஞ்சம்  யோசித்துபாரு

அது சிறியதாக இருக்கும்போது வளர்வதற்கு எவ்வளவுஉணவு கொடுத்த, அதோட கலர் பச்சையாகவும்வாய் சிவப்பாகவும் இருக்கிறத பாத்து என்னை கூப்பிட்டுசொல்லி எவ்வளவு சந்தோஷப்பட்ட, அப்புறம்அது பேசுறதுக்கு அத எவ்வளோ பாடுபடுத்தின!அதனோட நாக்குல வசம்புலாம் தடவினியேஇப்ப பாரு அது எவ்வளோஅழகா, ஸ்தோத்திரம் னு சொல்லுது, சின்னனு சொல்லுது, அதை போல தாண்டஉன் டீச்சரும் நீ நல்லவரானுங்றகிதுக்காக உன்னை கண்டிக்கிறாங்க.நீ நல்லா முயற்சி செய்.ஒரு இரட்டைக்கோடு நோட்டு வாங்கு நல்லஎழுதிப்பாரு, உனக்கும் கொஞ்ச நாள்ல Hand Writing Super ஆக வந்திடும்.உங்க டீச்சரும் உன்னை  வாழ்த்துவாங்க.

இதை வாசிக்கிற தம்பிதங்கைகளே உங்க டீச்சரும் உங்களகண்டிக்கும் போது, அது நம்மநல்லதுக்குதான்னு எடுத்துக்கிடுங்க,!அப்புறம் ஏதுவாயிருந்தாலும் உங்க பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்க எடுக்கிற முயற்சியாவையும் இயேசு தாமே வாய்க்கச்செய்வாராக!

 

மனப்பாடவசனம்

நல்யோசனைஉன்னைக்காப்பாற்றும் ; புத்திஉன்னைபாதுகாக்கும்நீதி .2:11

கிறிஸ்துவுக்குள்  அன்பான சிறுபிள்ளைகள் அனைவருக்கும்  இயேசுவின் நாமத்தில்  அன்பின்  வாழ்த்துக்கள்.

பதினெட்டு வயதில்   தன்  அன்புத்  தந்தையை  இழந்ததால்  தன்  பள்ளி  வாழ்க்கைக்கு ஒரு  முற்றுப்புள்ளி  வைத்துவிட்டு ஒரு  சிறிய  ஸ்தாபனத்தில் குறைந்த  ஊதியத்திற்கு  சேர்ந்தான் அருண். வேலையை  முடித்துவிட்டு  களைப்புடன் வீட்டிற்கு வந்தான். வீட்டிலோ அருணின்  தங்கை  உடல்நிலை  சரியில்லாமல்  இருப்பதை  பார்த்து, தேவன்  நம்மை  சற்று  அதிகமாகவே  சோதிக்கிறார். எனக்குள்  என்ன   குறை  என்பதை  தேவன் உணர்த்தினால்  நலமாயிருக்கும்  என்று  சோகத்துடன்  காணப்பட்டான்.

ஆனால் தாயோ, அருணை  பார்த்து மகனே, துயர  காலத்தில்  தான்  நமது  சுபாவ  குணங்களை  காண  முடியும். தேவன்  செய்வதெல்லாம்  நன்மையாகவே  இருக்கும் என்றார்கள். நாளைக்கு  அருண் தங்கையின்  பிறந்த  நாள், இன்று  அவளோ  வியாதியாயிருக்கிறாள். நமக்கோ போதுமான விசுவாசம்  இல்லை. அருண்  தனது  தங்கைக்கு  மருந்து   வாங்க  டவுனுக்கு சென்றான். அருண்  கடையை  நோக்கி  சென்று  கொண்டிருக்கும்  வேளையில்  தடாலென்று  சத்தம்  காணப்பட்டது. இவன்  சத்தம்  வந்த  திசையை  நோக்கி  பார்த்த  போது  தன் தங்கை  வயதையுடைய  ஒரு  சிறுமி  தலையில்  இரத்தம்  வடிய  விழுந்து  கிடந்தாள்.

இந்த  காட்சியைக்  கண்ட  அருண், காய்ச்சலுடன்  இருக்கும்  தன் தங்கையை  கவனிப்பதா, இச்சிறுமியை  கவனிப்பதா என  யோசிக்க  ஆரம்பித்தான். சிந்திப்பதெற்கு நேரமில்லை. சட்டென சிறுமியிடம்  சென்று  உன்  பெயர்  என்ன  என்றான்? ரேச்சல் என்றாள். கிறிஸ்தவ  பெயரைக்  கேட்டவுடன்  உள்ளத்தில்  இன்னும்  அதிகமாய்  பரிவு  ஏற்பட்டது. பக்கத்தில்  உள்ள  ஆஸ்பத்திரிக்கு சென்று  முதல் உதவியைப்  பெற்று  சிறுமியின்  வீட்டிற்கு  கூட்டிச்  சென்றான். இச்சிறுமியின்  வீட்டிலுள்ள  வேலைக்கார  அம்மாவிடம் நடந்ததைக்  கூறி  அவளை  வீட்டில்  விட்டுச் சென்றான். பின்பு  தன் வீட்டை  நோக்கி  வேகமாக  வந்தான்.

மருந்து  வாங்க  சென்ற  மகன்  மருந்தில்லாமல்  வெறுங்கையுடன் நின்றான். அருண்  தன்  அம்மாவிடம்  நடந்த சம்பவத்தை  கூறினான். தாயின்  உள்ளத்தில் ஒரு  புறம் தன்  மகனின்  தியாக  வாழ்க்கை, மறுபுறம்  மருந்தில்லாமல்  வெறுங்கையுடன் நிற்கும்  பரிதாப  நிலையை  பார்த்து  வருந்தினார்கள். அருண் அம்மாவைப்  பார்த்து, அம்மா  சோர்வடைய 

நன்மை செய்

இயேசுவின்  நாமத்தில் வாழ்த்துக்கள்! என்அன்புகுட்டிகளே உங்களுடன் மீண்டும் இந்த உரையாடல் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாதம் நண்பர்களை பற்றி பார்ப்போம்! ரனில் அம்மா  ரனிலை அன்புள்ளவனாக ,நல்ல குணம் உள்ளவனாக ,மற்றவர்களை நேசிக்கவும் ,உதவி செய்பவனாக வளர்த்தார்கள். அனில் அம்மா அவனை மனம் போன போக்கில் வளர்த்தனர்.கண்டிஷன் இல்லாமல் வளர்த்தனர்.இருவரும் வளர்ந்து காலேஜ் படிக்கும் போது நண்பர்களானார்கள்.

இருவரும் காலேஜ் படிக்கும் போது இமயமலை ஏறும் போட்டியில் பங்கு பெற்றனர் .மூன்று நாட்களாக மலை ஏரிய  இவர்கள் போகும் வழியில் ஒரு வாலிபன் மலை எற முடியாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தார்கள். அப்பொழுது ரனில் தன்னுடைய நண்பனான அணிலை பார்த்து இவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்.ஆனால் அனில் இவனுக்கு உதவி செய்தால் நாம் தோற்றுப்போவோம் நீ வேணும்னா உதவி செய் நான் போகிறேன் என்று சொல்லி புறப்பட்டான்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ரனில் கீழே விழுந்து கிடந்த அவனை தன்னுடைய முதுகில் சுமந்து புறப்பட்டான். கடுமையான குளிரில் நடந்தனர். நடக்க நடக்க ரனில் உடம்பில் உள்ள வெப்பம் தன்னுடைய முதுகின் மேல் கிடந்தவன் உடம்பில் பட்டது.வெப்பம் இறங்க இறங்க அவனுக்கு பெலன் கிடைத்தது . இருவரும் நடக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் பிரயாண தூரத்துக்கு அப்புறம் ரனில் போகும் வழியில் இன்னொருவர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தான் இருவருமாக சேர்ந்து அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கிட்ட போய் அவனை தூக்கிய போது அவன் குளிரால் பாதிக்கப்பட்டுஇரத்தம் உறைந்து  இறந்து கிடந்தான்.

அவன் வேறுயாரு மல்ல ரணிலின் நண்பன் அனில் தான் அவன் இதை வாசிக்கின்ற என் மாணவ பிள்ளைகளே உங்களுக்கு தெரியாமல் உங்களை உருவாக்குகிற நல்ல பெற்றோருக்காய் கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள் .வளர்ந்து வருகின்ற நீங்கள் உங்கள் பெற்றோருக்கும்,மற்ற எல்லோருக்கும் ஆசீர்வாதமானவர்களாக இருங்கள்!.

மனப்பாட வசனம் :

நன்மை செய்யும் படி  உனக்கு திராணியிருக்கும் போது,அதை  செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதி .3:27

இதயம் :-

இயேசுவின்  நாமத்தில்  உங்கள்  அனைவருக்கும்  வாழ்த்துக்கள். ஹலோ  செல்லங்களா   கோடை  விடுமு றையை கொண்டாடுகிறீர்களா  நல்லது  தான். எனக்கும்  நான்  சிறுவனாக  இருக்கும்  போது  விளையாடியவை  ஞாபகம்  வருகிறது  சரி  இருக்கட்டும்.

இந்த  மாதம்  நான்  சிறுவர்களாகிய  உங்களிடம்  ஒரு  கேள்வியை  வைக்கிறேன். முடிவில்  பதில்  தாருங்கள். நாம்  இன்று நமக்குள்  இருக்கும் இருதயத்தை பற்றி  சற்று  சிந்திப்போம்  என்று  சண்டே  கிளாஸ்  டீச்சர்  இஸ்ரவேல்  அண்ணன்  ஆரம்பித்தார்கள். சிறுவர்கள்  எல்லாரும்  சரி  என்று  சொன்ன  உடனே    இஸ்ரவேல்  அண்ணன் தம்பி!. தங்கச்சி!. நம்முடைய  உடலை  இரண்டாக  வெட்டினால்  (சரியாக  பிரித்தால்) எல்லா  உறுப்பும்  சரியாக  பிரியும். ஆனால்  இதயம்  மட்டும் ஒரு  பக்கமாக  ஒதுங்கி  விடும். நம்  உடம்பில்  இதயம்  ரொம்ப .... முக்கியம். நாம்  உயிர்  வாழ  இதய  துடிப்பு  ரொம்ப.....ரொம்ப .....முக்கியம். அதைப் போல  நாம்    நல்லவங்களா  இருப்பதும்  கெட்டவங்களா  இருப்பதும்  நம்  இருதயத்தில்  இருப்பதை  வைத்துதான்  தீர்ப்பு  இருக்கும்.

நம்  இருதயத்தில்  இருள்  அல்லது  வெளிச்சம்  ஆகிய  இரண்டில்  எதாவது  ஒன்று  தான்  இருக்கும். வெளிச்சம்  என்கிற  பொக்கிஷம்   இதயத்தில்  இருந்தால்  நல்லதை  பேசுவான். நல்லதை  செய்வான்  நல்ல  பையன்  என்று  பெயரும்  பெருவான். இருள்  இருந்தால்  உங்களுக்குள்  கெட்ட சுபாவங்கள்  வெளிப்படும்  ஏன  சண்டே  கிளாஸ்  டீச்சர்  சொன்னதும்  உடனே  எழுந்து  சரி  தான். எங்க  வீட்டுப்  பக்கத்தில்  ஒரு  அக்கா  எப்போதும்  சண்டை  போட்டுக்கொண்டே  இருப்பாங்க  அதற்கு  சண்டே  கிளாஸ்  டீச்சர்  நாம  அப்படி  இருக்க  கூடாது. வெளிச்சத்தின்    பிள்ளைகளா  (இயேசுவின்  பிள்ளைகளா) இருக்கனும்.

(இதை  வாசிக்கிற  அன்பு  உள்ளங்களே  விடுமுறை  நாட்களில் கெட்ட  விஷயங்களை கற்றுக்கொள்ளாதீர்கள்)

 

மனப்பாட  வசனம்:

இருதயத்தின் நிறைவினால் அவனவன்  வாய்  பேசும். (லூக்கா  6:45)

 

அமருங்கள்

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் !

என்னப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா தலைப்பே அமருங்கள் என்றதும் அடிக்கடி இந்த வார்த்தையை கேட்ட ஞாபகம் வருமே உண்மைதானே ! அதோடு என் மேல் கோபமும் வருமே கோபப்படாதீங்க குட்டிங்களா . விஷயம் இருக்கு அதனால தான் சொல்லுகிறேன் அமைதியாய் அமருங்கள் என்று .நான் இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க்கிறேன் .குளிர்சாதன பெட்டி (பிரிஜ்) கண்டு பிடிப்பதற்கு முன்பு பொருட்களை எப்படி பதப்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா இக்ளூ போன்ற பனிக்கட்டிகளால் ஆனா வீட்டிற்குள் வைத்துதான் பாதுகாத்தார்கள் .அதில் ஜன்னல்கள் இருக்காது ஆனால் இறுக்கமாக மூடக்கூடிய கதவு ஒன்று மட்டும் இருக்கும் குளிர்காலத்தில் ஏரிகளில் உறைந்து கிடக்கும் பெரிய பனிக்கட்டிகளால் அந்த பனிக்கட்டிகளுக்கு மேல் மரத்தூளை போட்டு மூடிவிடுவார்கள் .

ஒரு மனிதன் இந்த பனிக்கட்டி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டு இருந்த போது ,தன்னுடைய விலையுயர்ந்த கடிகாரத்தை உள்ளேயே வைத்து விட்டு வந்துவிட்டான் .உள்ளே சென்று மிகுந்த பதற்றத்துடன்  பனிக்கட்டிகள் மேல் கொட்டபட்டிருந்த மரத்தூளை கலைத்துத் தேடிப் பார்த்தான் .அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனுக்காக அவனோ பணிபுரியும் வேலையாட்களும் உள்ளே  சென்று தேடிப்பார்த்தார்கள் .ஒருவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை இதை வாசிக்கிற என் அன்பு தம்பி உன்னை போல ஒரு சிறுவன் ஐயோ நான் உங்கள் கை கடிகாரத்தை  கண்டு பிடித்து தரவா என்றான் .சரி என்று அந்த ஐயா சொல்ல உள்ளே சென்று கதவை பூட்டிய சிறுவன் அமைதியாக மரத்தூள் மேல் அமர்ந்தான் கொஞ்ச நேரத்தில் டிக் டிக் டிக் என்று கை கடிகாரத்தின் சத்தம் கேட்டது .அதை எடுத்து வந்து அந்த ஐயாவிடம் கொடுத்தான். உன்னால் எப்படி முடிந்தது என்று எல்லாரும் கேட்க ஐயா நீங்கள் யாரும் அமைதி காக்கவில்லை நான் உள்ளே போய் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்தேன் சத்தம் கேட்டது எடுத்து வந்தேன் என்றான் .இதை வாசிக்கின்ற என் அன்பு சிறுபிள்ளைகளே நீங்களும் இந்த சிறு வயதில் தினந்தோறும் இயேசப்பாவை நோக்கி அமர்த்திருங்கள் ஜெபியுங்கள் உங்களுக்கான ஆசீர்வாதங்களை சுதந்தரியுங்கள் .

மனப்பாட வசனம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும் நீதி .10:22

மன்னிப்பு

ஹாய் குட்டீஸ் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

      சாந்தி வரைந்த படம் சரியாகவே வரவில்லை.ரப்பரை எடுத்து அழித்தாள்.படம் கருப்பானதுதான் மிச்சம்! அவளுடைய ரப்பர் கருத்துப் போய் இருந்தது. அவளுக்கு எரிச்சல் வரவே,எழுந்து சென்ற அவள் சுவரில் ரப்பரை வைத்துத் தேய்த்தாள்.அப்படியாவது ரப்பர் வெள்ளை ஆகாதா என்ற எண்ணம்தான்! டீச்சர் இதைக் கவனித்து.சாந்தி,அங்கே என்ன பண்ணுகிறாய்?என்று அதட்டினார்கள்,சாந்தி ஒன்றுமே பதில் சொல்லாமல் தன் இடத்திற்கு திரும்பினாள்.பாதி வழியில் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.லதாவுக்கு முன்னால் மேசையில் ஓர் அழகான மிக்கிமெளஸ் ரப்பர் இருந்தது அவள் தன் அப்பாவிடம் மிக்கிமெளஸ் ரப்பர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.அவரோ இன்னும் வாங்கித் தரவில்லை.லதாவிடம் இருக்கும் ரப்பர் தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சாந்தி,மெதுவாக கையை நீட்டி லதாவின் ரப்பரை எடுத்துக் கொண்டாள்.அந்த ரப்பரை தன் பள்ளிக்கூட பைபிள் உள்ளே அதை திணித்தாள்.டீச்சரிடம் பேசிவிட்டு திரும்பிய லதா மேசை மீது இருந்த ரப்பரைக் காணாமல் திகைத்தாள்.டீச்சர்,என்னுடைய  ரப்பரைக் காணோம் என்று கத்தினாள்.அங்கேதான் வைத்திருப்பாய் தேடிப்பார் என்று சொல்லிவிட்டார்கள் டீச்சர் சாந்தியோ.டீச்சர் என்னுடைய ரப்பரை எங்கேயும் காணோம் என்று அழுதாள்,டீச்சர் அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.பிள்ளைகளைப் பார்த்து,லதாவின் ரப்பரை யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.பிள்ளைகளோ நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.சாந்தி தன் பையிலிருந்து மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து தன் வீட்டின் அலமாரியில் ஓரமாக ஒளித்து வைத்தாள்.அதை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.ஏண்டி,எண்ண ஆயிற்று நானும் வந்த நேரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்ன நடந்தது என்றுதான் சொல்லேன் என்று வற்புறுத்தினார்கள் அம்மா.அதற்குமேல் மறைத்து வைக்க சாந்தியால் முடியவில்லை.அவள் நேரே அலமாரிக்குச் சென்று அந்த மிக்கிமெளஸ் ரப்பரை எடுத்து வந்தாள்.இது... இது...லதாவின் ரப்பர்.அவளுக்குத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டேன் என்று கூறினாள் சாந்தி.உடனே இயேசு சாமியிடம் மன்னிப்புக் கேள் என்று கூறினார்கள் அம்மா.முழங்காற்படியிட்ட சாந்தி,ஆண்டவரே,நான் தப்புப் பண்ணிவிட்டேன்.என்னை மன்னித்து எனக்கு உதவும் நாளை நான் டீச்சரிடம் போய்ச் சொல்லும்போது நீரே எனக்குத் துணையாக இரும் என்று ஜெபித்தாள் மனநிம்மதியுடன் படுத்து உறங்கினாள்.மறுநாள் சாந்தி நேரே டீச்சரிடம் சென்றாள்.அவள் தயங்கியபடி,தன் கையிலிருந்த ரப்பரை நீட்டினாள்.டீச்சர் தான் நேற்று லதாவின் ரப்பரை எடுத்துவிட்டேன் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் சாந்தி.நீ செய்தது தப்புதான் ஆனால் நீ அதை உணர்ந்துவிட்டாய் வெரிகுட் நல்ல பிள்ளை... என்று கூறிய டீச்சர் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள்! அவர்களாகவே லதாவைக் கூப்பிட்டு அந்த ரப்பரைக் கொடுத்தார்கள்.லதா சாந்தியைப் பார்த்துச் சிரித்தாள்.சாந்தியும் மகிழ்ச்சியோடு சிரித்தாள்.

அன்பு பிள்ளைகளே! நீங்களும் உங்கள் தவறுகளை இயேசுவிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக்கேட்டால் அவர் உங்களை மன்னித்து ஆசீர்வதிப்பார்.ஆமென்.

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி 1 யோவான் 1:9

கீழ்படித்தல்

இயேசுவின் நாமத்தில் குட்டீஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

டேய் ராஜா அந்த பண்ணையார் தோப்பைப் பார்த்தாயா ? என்றான் ரவி. இது என்னடா கேள்வி நாள்தோறும் இதே வழியில் தானே பள்ளி செல்கிறோம் .தோப்பை பார்க்காமலா இருக்க முடியும் என்றான் ராஜா .சரி இப்ப அதற்கென்ன என்றான் ராஜா .

அதற்கு ஒன்றுமில்லை .... அங்குள்ள மாமரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறதைப் பார்க்கும் போதே பறித்துச் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்றான் ரவி .இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டு செல்லும் போது அங்கு வந்த ஜாண் என்ன இருவரும் பெரிய திட்டமிடுகிறது போல் தெரிகிறது தெரிகிறதே என்றான்.அப்படி ஒன்றும் பெரிதான திட்டமில்லை பள்ளி முடிந்து வரும் போது அந்த பண்ணையார் வீட்டு மாந்தோப்பில் சென்று மாம்பழம் பறிக்கலாம் என ரவி கூறுகிறான்.என்று ராஜா சொன்னதும் டேய் நீ ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா? டேய் நீ ஞாயிறு பள்ளியில் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்து விட்டாயா? பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது .தேவ வசனத்துக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று புத்தி சொன்னான்.சரி போயா ,உனக்கென்ன தெரியும் என்று ராஜா ,ரவி இருவரும் சொல்லிக் கொண்டே பள்ளி சென்றனர்.

மாலை பள்ளி முடிந்து வரும்போது ராஜா ,ரவி இருவரும் திட்டமிட்டபடி பண்ணையார் தோப்பிற்குள் நுழைந்தனர். ரவி வேகமாக மரத்தில் ஏறி பழங்களைக் பறித்ததுப் போட ராஜா வேகமாக ஓடி ஓடி பொறுக்கினான் .திடீரென்று எங்கிருந்தோ வந்த காவலாளியின் சத்தம் கேட்டதும் ஓடி ஓடி பொறுக்கின பழங்களையெல்லாம் போட்டுவிட்டு ஓடிவிட்டான் ராஜா.

தப்பித்தால் போதும் என்று மரத்திலிருந்து குதித்து தோட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டான் ரவி ஆனால் நடக்க முடியவில்லை. கால் அதிகமாக வழித்ததால் நொண்டி நொண்டி நடந்து தனிமையில் வீடு வந்து சேர்ந்தான் .பெற்றோரிடம் உண்மையைக் கூறி <

களவு செய்யாதிருப்பாயாக

பொன்னன் என்ற விவசாயிக்கு கொஞ்சம் நிலமும் இரு உழவுமாடுகளும் இருந்தன. நிலத்தில் வரும் கொஞ்ச வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். பொன்னன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர் .

ஒருநாள் அவரது உழவுமாட்டில் ஒன்று நோயுற்று இறந்துவிட்டது. சில நாட்கள் சென்ற பின் மனைவி நோயுற்றாள். மருத்துவம் பார்க்க பணம் இல்லாத காரணத்தினால் உழவு மாட்டை விற்பதற்காக தூரத்திலுள்ள சந்தைக்கு ஓட்டிச்சென்றார். போகும் வழியில் சவுக்குத் தோப்பு வந்த போது அங்கு மறைந்திருந்த மாடசாமி என்பவன் பொன்னனை அடித்துக் காயப்படுத்திவிட்டு மாட்டை சந்தைக்கு ஒட்டிச் சென்றுவிட்டார்.

பொன்னன் எழும்பமுடியாமல் காயத்தின் வலியினால் முனங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு வந்த மாடு மேய்க்கும் சிறுவர்களால் காப்பாற்றப்பட்டு மாடு விற்கும் சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள காவலரிடம் உண்மையைக் கூறி அவரது ஆலோசனைப்படி சந்தையில் மாடசாமியோ 'இது  என்னுடைய மாடு;தர முடியாது' என்றான். உடனே பொன்னன் மாட்டின் கண்களைத் துண்டால் மூடி எனது மாட்டிற்கு ஒரு கண் குருடு என்றும் அது எந்தக்கண் என்று கூறிவிடு தந்து விடுகிறேன் என்றார். செய்வதறியாது திகைத்தான் மாடசாமி சற்று தயங்கிய பின் இடதுகண் குருடு என்றான். காவலர் சோதித்துவிட்டு இரு கண்களும் நன்றாயிருப்பதை அறிந்து பொன்னனிடம் மாட்டை ஒப்படைத்தார். மாடசாமிக்கோ 6 மாத சிறைத்தண்டனையும் , பொன்னனுக்கு ரூபாய் 1000 கொடுக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.

பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடிச்சென்ற மாடசாமி சிறைச்சாலை சென்றான். பொன்னன் கிடைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் ஒரு உழவுமாடு வாங்கி மனைவிக்கு மருத்துவமும் பார்த்து நோய் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.23.09.2018 அன்றைய செய்தியில் கூட 15 வயது சிறுவன் சிறு வயதிலேயே பல திருட்டுகளைச் செய்து வந்ததாகவும், அநேகரது செல்போனைத் திருடியதாகவும் யாரோ சிலர் அவனை அடித்து கொன்று விட்டதாகவும் கூறப்பட்டது. இளம்வயதில் சந்தோஷமாய் வாழ வேண்டிய சிறுவன் தவறான குணத்தால் மறுத்துவிட்டான்.

என் அன்பு பிள்ளைகளே! உங்களிடம் உள்ளதில் சந்தோஷமாயிருங்கள். நல்ல குணங்களைத் தாரும் என்று இயேசப்பாவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

மனப்பாட வசனம் : பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக ; பிறனுடைய மனைவியையும் ,அவனுடைய வேலைக்காரனையும் அவனுடைய வேலைக்காரியையும் ,அவனுடைய எருதையும் ,அவனுடைய கழுதையையும் பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத்.20:17