பெண்கள் பகுதி

நிலைத்திருங்கள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்! .ஆண்டவர்நம்மை ஒரு புதிய வருடத்தை க்காணச் செய்து இருக்கிறார். தேவனுக்கேமகிமை. கடைசிகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இயேசுவின் வருகைமிகசமீபம் அவரை சந்திக்கநாம் எப்போதும் ஆயத்த முள்ளவர்களாய் காணப்பட வேண்டும்


இயேசுவில்நிலைத்திருங்கள் :யோவான் .15:46

இயேசு கூறுகிறார் என்னில் நிலைத்திருங்கள். நானும்  உங்களில் நிலைத்திருப்பேன். இயேசுவில் நிலைத்திருக்கிறேன் என்றால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கவேண்டும். ஒவ்வொருநாளும் நமக்குள் இயேசுவைப் போல் மாறுகிற அனுபவம் காணப்பட வேண்டும். பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இயேசுவின் திவ்விய சுபாவம் வெளிப்பட்டால் கனிகொடுக்கிறவர்களாய் காணப்படுவோம். நிலைத்திராவிட்டால் வெளியே எறியுண்ட கொடியைப்போல எறியுண்டு போவார்கள். பெண்களே! உங்கள் வாழ்வில் என்ன வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் தொடர்ந்து இயேசுவில் நிலைத்திருங்கள். கனி கொடுக்கிற வாழ்வு காணப்படும்.

2. வார்த்தையில்நிலைத்திருங்கள் :யோவான் 15:7,8

இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருங்கள். வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தையை விட்டு விலகப்பண்ணக்கூடிய எத்தனையோ, தவறான உபதேசங்கள் ,போதனைகள், ஊழியர்கள் பெருகி இருக்கிற இக்காலத்தில் பெண்களாகிய நீங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாய், விழிப்பானவர்களாய் இருந்து வேதவசனத்தின் மேல்கட்டப்பட்டவர்களாய், உங்கள் குடும்பத்தை வேதவசனத்தின் மேல்கட்டுகிறவர்களாய் காணப்பட எப்போதும் விழிப்புள்ளவர் களாய்காணப்படுங்கள். வஞ்சிக்கப்படாதிருங்கள். இயேசுவின்வார்த்தையில் (வசனத்தில்)நிலைத்திருங்கள்.


3.அன்பில்நிலைத்திருங்கள் :யோவா.15:9-12

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். கடைசி காலத்தில் அன்புதணிந்துபோகும். இக்காலத்தில் அன்பு தணிந்து போவதை கண் கூடாகப்பார்க்கிறோம். இப்பொழுதுவிசுவாசம் ,நம்பிக்கை ,அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பேபெரியது. இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பீர்களானால் அவருடைய கற்பனைகளைகைக் கொள்ளுகிறவர்களாய் இருப்பீர்கள். கர்த்தரிடத்தில் அன்பு கூறு. உன்னை நேசிப்பது போலபிறனையும் நேசி என்ற கற்பனைகளைக்கைக் கொள்வீர்களானால் ,அவருடைய சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிறைவாய் இருக்கும். ஆகவேபெண்களே !இயேசுவின் அன்பில் நிலைத்திருங்கள்.                          நானே  நல்ல மேய்ப்பன்

 

ஆண்டவராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய  நாமத்தில்  பெண்களாகியஉங்களுக்கு  என்  அன்பின்  வாழ்த்துக்கள்.சுகமாயிருக்கிறீர்களா! இந்த  இதழின்  வழியாக  உங்களை  சந்திப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன்.நமது  சபையின்  பெண்கள்  ஐக்கிய  ஊழியத்தை  கர்த்தர்  ஆசீர்வதித்து  வருகிறார்.ஜெபித்து கொள்ளுங்கள். இது  வரைக்கும்  நடத்தினஎபிநேசர்  இனிமேல்உங்களை  நடத்துவார்.சூழ்நிலைகளைப்   பார்த்து  சோர்ந்து  போகாதீர்கள்.மேலானவரையே  நோக்கிப்  பாருங்கள்.ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆண்டவராகிய  இயேசு  கிறிஸ்து  நமக்கு  நல்ல  மேய்ப்பனாய்  நம்மோடுஇயேசு  கிறிஸ்து  இருக்கிறார்,இருப்பதனால்  உண்டாகும்  ஆசீர்வாதங்கள்  என்ன  எனப்  பார்ப்போம்.

1. தன்  ஜீவனைக்  கொடுத்தார் :-

இயேசு  நல்ல  மேய்ப்பனாய்  ஆடுகளுக்காக  (நமக்காக)தன்  ஜீவனையேகொடுத்தார்.  ஜீவனை  கொடுப்பதைப்  பார்க்கிலும்  மேலான அன்புவேறொன்றில்லையே.  இயேசு தன்  ஜீவனைக்  கொடுத்து,  பாவிகளாய்  வாழ்ந்த  நம்மை  இரட்சித்துஅவருடைய  பிள்ளையாய்  மாற்றி  இருக்கிறார்.ஜீவனையே கொடுத்தவர், மற்றவைகளை  அருளாதிருப்பதெப்படி?ஆகவே பெண்களே ! இயேசு  நம்மேல்  வைத்திருக்கிறஅன்பை  புரிந்துகொள்ளுங்கள். விடுதலை பெற்றுக் கொள்வது  நிச்சயம்.ஜீவனைக்  கொடுத்த  இயேசுவுக்காக  நீங்களும்  ஏதாவதுசெய்யுங்கள் . ஒரு  ஆத்துமா  கெட்டு  போவது  கூடஅவருக்கு  சித்தம்  இல்லை.எல்லாரும் இரட்சிக்கப்படுவதும், சத்தியத்தை  அறிகிறஅறிவை  அடையவும், இயேசு  சித்தம்  உள்ளவராய்இருக்கிறார். இன்றே தீர்மானம் எடுங்கள்.

2. நம்மை  நடத்துகிறார்:-

ஜீவனைக்  கொடுத்தவர்,நம்மை  புல்லுள்ள  இடங்களில்  மேய்த்து,அமர்ந்த  தண்ணீரண்டை  நடத்துகிறார்.நம்  வாழ்க்கையை  வறட்சிக்குநேராக  அல்ல,செழிப்புக்கு  நேராய்  நடத்துகிறார்.இஸ்ரவேல் ஜனங்களை  40 ஆண்டுகள்  வனாந்தரத்திலே  வழிநடத்தினவர்,தேவைகளை சந்தித்தார், பாதுகாத்தார், அற்புதங்கள் செய்தார். குறைவில்லாமல் நடத்தினார். பெண்களே! உங்களையும் வழிநடத்த, போஷிக்க, உங்கள் வாழ்வில் அற்புதங்களை    செய்ய  வல்லமையுள்ளவர்நீங்கள்நடக்க  வேண்டிய  வழியிலேஉங்களை  நடத்துகிறவர்அவர்நல்ல மேய்ப்பன்.

3. நம்மை  பாதுகாக்கின்றார்:-

திருடன் திருடவும், கொல்லவும்,அழிக்கவும்  வருகிறானேயன்றி,வேறொன்றுக்கும் வரான். ஆனால்  நல்ல மேய்ப்பனாகிய இயேசு  நித்திய  ஜீவனைக்  கொடுக்கவும்,நம்மில்  ஜீவன்  உண்டாயிருக்கவும்,அது பரிபூரணப்படவும்  செய்கிறார்.நாம்  ஒருக்காலும்  கெட்டு  போவதில்லை.ஒருவனும்  அவர்  கையிலிருந்துநம்மை பறிப்பதுமில்லை. ஒரு  விசேஷித்தப்  பாதுகாப்பை  நமக்கு  வைத்திருக்கிறார்.எதைக்குறித்தும்  பயப்படத்தேவையில்லை. பெரியவர்  நம்மோடு  இருக்கிறார்.நம்மை  கடைசி  வரைநிலைநிறுத்திக் கரை     சேர்ப்பார்.அவர்  நல்ல  மேய்ப்பன்.


பொறுமை

         ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவின் இனியநாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.சுகமாயிருக்கிர்களா! கர்த்தர் நல்லவர் தமக்கு சித்தமானதையெல்லாம் அவர் செய்கிறார். எபி 10:3 நீங்கள்  தேவனுடைய சித்தத்தின் படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை பெரும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறதுகுடும்பத்தை கட்டுகிற  பொறுப்பில் இருக்கும் பெண்களாகிய நமக்கு பொறுமை அவசியம்.தேவசித்தம் செய்யணும், வாக்குத்தத்தம் நிறைவேறணும், ஜெபம் கேட்கப்பட்டு பதில்வரணும் என்ற ஆசையுள்ளவர்களுக்கு பொறுமைமிக மிக அவசியம். வேதத்திலேபொறுமையோடு காத்திருந்து வாக்குத்தத்தத்தை சுதந்தரித்தவர்களை இந்த இதழில் காண்போம்.

1. ஆபிரகாம் :- எபி 13 - 15

       ஆபிரகாம்,"அந்தபடியேஅவன் பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றான்". தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்தவாக்குத்தத்தம் 25 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.ஆபிரகாம்விசுவாசத்தின் தகப்பன் மாத்திரமல்ல, வாக்குத்தத்தம்நிறைவேற பொறுமையோடு காத்திருந்தவன். பெண்களே! உங்களுடைய பொறுமையை பரிசோதியுங்கள். விசுவாசிக்கிறேன் என்று சொல்கிற  உங்களுக்கு பொறுமை இருக்கிறதா!அவசரப்படுகிறீர்களாகர்த்தர் உங்களுக்குவாக்குத்தத்தம்   கொடுத்திருப்பாரானால்  நிச்சயம்நிறைவேறும். காலங்கள்  ஆனாலும்நிறைவேறும் சாராளை போல அவசரப்பட்டுபிரச்சனையை  உருவாக்கி விடாதீர்கள்.பொறுமையோடு காத்திருங்கள்.

2. ரூத்:-ரூத் 3:18

         மோவாபிய ஸ்திரியாகிய ரூத்,தன் மாமியுடன் பெத்லகேமுக்கு வந்தவளுக்கு, கிடைத்த வாக்குத்தத்தம் (ரூத் 2:11) “இஸ்ரவேலின்தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக”  என்பதே, ஆனால் வாக்குத்தத்தம்நிறைவேறும் படி, நகோமி  ரூத்தைப் பார்த்து இந்தகாரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியும் மட்டும் " பொறுத்திரு " - பொறுத்திருந்தரூத் நிறைவான பலனை பெற்றுக்கொண்டாள். பெண்களே! தேவசித்தம் நிறைவேற, வாக்குத்தத்தம்நிறைவேற சில காலங்கள் பொறுத்திருங்கள். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். ஏற்றகாலத்தில்உயர்த்தும் படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள்.பொறுமையை இழந்துவிடாதீர்கள்.

3.யோசேப்பு :-

     யோசேப்புக்குஆண்டவர் சொப்பனத்தின் மூலமாக அவனுடைய எதிர்காலத்தை வெளிப்படுத்தினார். அனால் யோசேப்பின்வாழ்வில் அவன் கடந்து வந்த பாதை, சூழ்நிலைகளை பார்க்கும் போது சொப்பனம் நிறைவேற வாய்ப்பேஇல்லை என்ற நிலை, ஆனாலும் எல்லா சூழ்நிலையிலும் தேவசித்தம் நிறைவேற பொறுமையோடு வாய்ப்புகளுக்காககாத்திருந்தான். ஒரு நாள் தேவன் காண்பித்த உயர்வை அடைந்தான். பெண்களே! வாக்குத்தத்தத்தை  பாருங்கள், வாக்குத்தத்தம் கொடுத்த தேவனை பாருங்கள்,சூழ்நிலைகளை பாராதேயுங்கள். சூழ்நிலைகளை தலைகீழாய் மாற்றும் தேவன் உங்கள் வாழ்வில்நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகளிலே உயர்வை தர வாக்குத்தத்தை நிறைவேற்ற வல்லமையுள்ளவர்.ஆகவே பிரச்சனைகளிலே பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது .


குணசாலியான ஸ்திரி

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் !சுகமாயிருக்கிறீ ர்களா ! நீதி .31:10- ல் "குணசாலியான ஸ்திரியைக் கண்டுபிடிப்பின் யார்?அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்து ".குணசாலியான பெண்ணாய் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் வாழத்தான் முடியவில்லை. முத்து என்றால் பெண்களுக்கு பிடிக்காமல் இருக்க முடியாது. ஆனால் வேதம்,நீ குணசாலியாய் மாறிவிட்டால் ,நீ முத்துக்களைப் பார்க்கிலும் மதிப்பு மிக்கவள் என்று கூறுகிறதே அப்படியால் அப்படிப்பட மதிப்பை நாம் எப்படி இழப்பது .இந்த இதழில் பெற்றுக் கொண்ட நபர்கள் மூலம் நாமும் கற்றுக் கொள்வோம்.

1.ரூத் : ரூத் .3:11

"நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்". தன் மாமியாகிய நகோமியுடன் மோவாப் தேசத்தை விட்டு பெத்லேகேம் வந்தவள் ,இந்த இடம் எனக்கு பழக்கமில்லை என்று சொல்லி ,தன் மாமிக்கு பாரமாயிராமல் உதவியாகவே இருந்தாள். கோதுமை அறுப்பும் ,வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் போய் கதிர்களை பொறுக்கி கொண்டு வந்தாள். அதுமாத்திரமல்ல ,தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.ரூத்தின் பண்பு ,செயல்கள் ,உற்சாகத்தோடு வேலை செய்தல்,சுறுசுறுப்பு ,ஞானம் எல்லாம் தான் அவள் குணசாலி என ஊரார் அறியும்படி செய்தார்.பெண்களே ! நீங்கள் எப்படி ?ரூத்திடம் குணங்களை பெற்றுக் கொள்ளுவீர்களானால் குணசாலியாய் திகழலாம் .

2.பெரோயா பட்டணத்தார்:அப் 17:11

அந்தப் படடனத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு,காரியங்கள் இப்படியிருக்கிறா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தத்தினால் தெசலோனிக்கையில்  உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.பெண்களே! நீங்களும் கலங்கமில்லாத ஞானப் பாலாகிய வேத வசனத்தின் மேல் வாஞ்சையுள்ளவர்களாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு ,உங்கள் வாழ்வில் அப்பியாசப்படுத்துவீர்களானால் ,நீங்களும் குணசாலியான பெண்ணாய் மாறுவீர்கள் .வசனம் உயிர் உள்ளது அது நமக்குள்ளே மாற்றத்தைக் கொண்டுவரும்.

3.எலிசபெத் : லூக் .1:6

அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின் படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து ,தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார் .எலிசபெத் தன் புருஷனோடு இணைந்து எல்லா காரியங்களிலும் ஒரு மனதை உத்தம குணத்தை காத்துக் கொண்டவள் .பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவள் ,வழி நடத்தப்பட்டவள் நீதி .31:30,3 கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் .அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள் அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளை புகழக்கடவது என்ற வசனத்தின் படியே புகழைப் பெற்றவள் எலிசபெத் பெண்களே எலிசபெத்தை போல புகழப்பட ,குடும்பத்தில் ஒருமணம் ,கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தைக் காத்து நடவுங்கள் குணசாலி என புகழப்படுவீர்கள்.

முன்  மாதிரியான  வாழ்க்கை

ஆண்டவராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய  நாமத்தில்  பெண்களாகிய  உங்களுக்கு  என்  அன்பின்  வாழ்த்துக்கள். சுகமாயிருக்கிறீர்களா! குடும்பத்திலே  ஆண்டவர்  உங்களுக்கு  ஒரு  முக்கியமான  பொறுப்பைக்   கொடுத்துள்ளார். மறந்து  விடாதீர்கள். நான்  ஏன்  பெண்ணாய்  பிறந்தேன்  என  நொந்து  கொள்ளாதீர்கள். நீங்கள்  உங்கள்  குடும்பத்திற்கு  முக்கியமானவர்கள். முன்  மாதிரியாய்  வாழ  வேண்டியவர்கள். உங்கள்  பொறுப்பை  உணர்ந்து  வாழுங்கள். உங்கள்  பிரயாசத்திற்கான  பலனை  நிச்சயமாய்  பெற்றுக்  கொள்வீர்கள். இந்த  இதழில்  எந்தக் காரியத்திலெல்லாம்  முன்  மாதிரியாய்  வாழ  வேண்டும்  எனப்  பார்ப்போம்.

1. அர்ப்பணிப்பு :-

உங்கள்  அர்ப்பணிப்புள்ள  வாழ்க்கை  அநேகருக்கு, பின்  சந்ததியாருக்கு  ஒரு  நல்ல  எடுத்துக்காட்டாய்  அமையும்  படி  வாழ்வீர்களானால்  ஆசீர்வாதமான  பெண்மணியாய்  காணப்படுவீர்கள். பெண்  என்றாலே  குடும்பத்திற்காய், குடும்ப  நலனுக்காய்  உங்கள்  எதிர்பார்ப்பு, ஆசை, பலன், உழைப்பு,நேரம்  எல்லாமே அர்ப்பணித்து  வாழ  வேண்டியது  அவசியம். அதே  நேரம், ஆண்டவருக்காகவும்  தெபோராளைப்போல  உங்கள்  வாழ்க்கையை  அர்பணியுங்கள், ஆத்தும  ஆதாயம்  செய்ய, ஆண்டவருடைய  வேலைக்காக  உங்கள்  வாழ்க்கையை  அர்ப்பணிக்கும்  போது  உங்கள்  சந்ததிகளும்  ஆசீர்வதிக்கப்படும். மேன்மையடைவீர்கள்.

2. ஜெப  வாழ்க்கை :-

பெண்ணான  நீங்கள்  விசுவாசித்து  ஜெபிக்கிற  பெண்ணாய்  இருப்பீர்களானால்  எல்லாக்  காரியங்களிலும்  ஜெயம்  உறுதி,சந்தேகமே  இல்லை. உங்கள்  ஜெப  வாழ்க்கையே  உங்கள்  பிள்ளைகள்  வாழ்விலும்  மாற்றத்தைக்  கொண்டு  வரும். அவர்களும்  ஜெபிக்கிற  சந்ததியாய்  இருப்பார்கள். ஆகவே  நீங்கள்  உங்கள்  வாழ்வில்  வரக்கூடிய  சோர்வை  விட்டு  எழும்புங்கள். தேவனோடு  நேரத்தை  செலவழிக்க  திட்டமிடுங்கள். ஒரு  ஆசீர்வாதத்தின்  பாத்திரமாய்  திகழ  தீர்மானம்  எடுங்கள். உங்கள்  வாழ்க்கையே  ஜெபமாய்  மாறட்டும். புதிய  ஏற்பாட்டு  அன்னாளைப்  போல.

3. விசுவாசம்  :-

பெண்களாகிய  நீங்கள்  எப்படிப்பட்ட  விசுவாசம்  உடையவர்களாய்  இருக்கிறீர்களோஅதே  விசுவாசம் தான்  உங்கள்   சந்ததியிடமும்  காணப்படும். உங்கள்  வார்த்தைவிசுவாச  வார்த்தையாய்  காணப்படட்டும்.   அவிசுவாசம், முறுமுறுப்பு   இடம் கொடாதீர்கள். பவுல்    தீமோத்தேயுவைப்  பார்த்துக்  கூறும்போது  II தீமோ  1:5 அந்த  விசுவாசம்  முந்தி  உன்  பாட்டியாகிய  லோவிசாளுக்குள்ளும், உன்  தாயாகிய  ஜனிக்கேயாளுக்குள்ளும்  நிலைத்திருந்தது. அது  உனக்குள்ளும்  நிலைத்திருக்கிறதென்றுஜெபத்தை கேட்பவரே

              ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!. சுகமாயிருக்கிறீர்களா! நம் ஆண்டவர் ஜெபத்தை கேட்கிறவர். கூப்பிடுகிற காக்கை குஞ்சிக்கும் ஆகாரம் கொடுக்கிறவர். அவைகளை பார்க்கிலும் விசேஷமானவர்களாகிய உங்கள் ஜெபத்தை, கூப்பிடுதலை கர்த்தர் கேட்பார்  பெண்களாகிய நீங்கள், உங்கள் குடும்பத்திற்கு முக்கியமானவர்கள். எந்த தாய் ஜெபிக்கிறவர்களாய் இருந்தார்களோ! அவர்கள் பிள்ளைகள் எல்லாம் தேசத்திலே, ஊழியத்திலே, உயர்ந்திருந்தார்கள்!  இதை வாசிக்கிற பெண்களே!  இன்றே தனித்து ஜெபிக்க தீர்மானம் எடுங்கள்.

       1. அந்தரங்க ஜெபம் :- மத் 6:6

பெண்களாகிய நீங்கள் பிரச்சனைகளையே பேசுகிறவர்களாய், சிந்திக்கிறவர்களாய் இராமல், எல்லாவற்றையும் தேவ சமூகத்தில் இறக்கி வையுங்கள். ஜெபம் பண்ணும் போது அறைவீட்டுக்குள் பிரவேசித்து, கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உங்கள் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுங்கள். அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் பலனளிப்பார். எசேக்கியா ராஜாவைப் பார்த்து ஏசாயா தீர்காதரிசி வீட்டு காரியத்தை ஒழுங்கு படுத்து நீர் மரிக்க போகிறீர் என்றவுடன், ராஜா சுவர் புறமாய் திரும்பி, வாக்குத்தத்தத்தை நினைப்பூட்டி கண்ணீருடன் ஜெபித்தான். கார்த்தர் ஜெபத்தை கேட்ட உடனே பதில் கொடுத்தார். பெண்களே! அந்தரங்கத்தில் ஜெபித்து பாருங்கள் உடனே பதிலை பெற்று கொள்வீர்கள்.

        2. நீதிமான்களின் ஜெபம் :- நீதி 15:29

நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார். யார் நீதிமான்? இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பின் நிச்சயம் உள்ளவர்கள் நீதிமான். பெண்களே! இந்த நிச்சயம் உங்களுக்குள் இருக்கிறதா? இருந்தால் நீங்கள் நீதிமான். உங்கள் ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா நம்மைப் போல பாடுள்ள மனுஷன் தான் . ஆனால்  அவன் கருத்தாய் ஜெபித்த போது, கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்தார். நீதிமான்களாகிய உங்களுக்கும் பதில் கொடுப்பார்.

3. உகந்த ஜெபம்:- 1 யோவான் 5:14,15

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின் படி கேட்டால், அவர் நமக்கு செவிகொடுக்கிறாரென்று அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்று கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். ஆண்டவர் சாலமோனிடத்தில் நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்ற போது ஞானத்தைக் கேட்டான். அவனுடைய ஜெபம் கர்த்தருடைய பார்வையில் உகந்த ஜெபமாயிருந்தது. அவன் கேட்ட ஞானத்தையும் அவன்  கேளாத ஐஸ்வரியமும், கனமும், மகிமையையும் கொடுத்தார். பெண்களே! கர்த்தருடைய பார்வைக்கு ஏற்ற ஜெபத்தை நீங்கள் ஏறெடுப்பீர்களாக! நீங்கள் கேட்டதையும் கொடுப்பார். ஆகவே பெண்களே ஜெபத்து பாருங்கள். அற்புதத்தைக் காண்பீர்கள். நம் தேவன் ஜெபத்தை கேட்பவர்.

இயேசுவையே நோக்கிப் பார்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்! சுகமாயிருக்கிறீர்களா! மரித்தேன் ,ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் என்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். அவர்கள் அவரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தார்கள்.அவர்கள் முகங்கள் வெட்கமடையவில்லை .சங்.34:5 உங்கள் வாழ்வில் வரக்கூடிய எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள் .மீட்ப்புடையவீர்கள். இந்த இதழில் நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தவர்களைக் குறித்துப் பார்ப்போம் .

1.பர்த்திமேயு :

பார்வை இல்லாதவனாய் இருந்த பார்த்திமேயு. தான் எப்படியாயினும் பார்வையடைய வேண்டும் என்ற வாஞ்சையில் இயேசுவையே நோக்கிப் பார்த்துக் கூப்பிட்டான் பார்வையடைந்தான் . பெண்களே ! நம்முடைய வாழ்வில் வாஞ்சை நிறைவேற இயேசுவையே நோக்கிப் பார்க்கிறோமா? அல்லது வேறு வழியிலே நம்முடைய வாஞ்சையை நிறைவேற்ற ,நாம் திருப்திப்படும் அளவில் அற்புதம் செய்ய இயேசுவால் மட்டுமே கூடும் .ஆகவே பர்த்திமேயு குருடனைப் போல இயேசுவையே நோக்கிப் பாருங்கள் வாஞ்சை நிறைவேறும் .

2. யவீரு :

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மகளுடைய மரணப்படுக்கை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவை நோக்கிப் பார்த்த யவீரு .தான் விரும்பினதைப் பெற்றுக் கொண்டான் .பெண்களே ! உங்கள் வாழ்வில் விரும்புவதைப் பெற்றுக் கொள்ள இயேசுவையே நோக்கிப் பாருங்கள் .உங்கள் விசுவாசம் சோதிக்கப்படலாம்.ஆனாலும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து பெற்றுக் கொள்ளும் வரை நோக்கிப் பாருங்கள் .யவீருவைப் பார்த்து இயேசு பயப்படாதே ! விசுவாசமுள்ளவனாயிரு என்றது போல, இன்றும் உங்களைப் பார்த்து அதே வார்த்தையைக் கூறுகிறார்.ஆகவே விசுவாசித்து இயேசுவையே நோக்கிப் பாருங்கள்.  விரும்புகிறதைப் பெறுவீர்கள் .

3.நூற்றுக்கு அதிபதி :

நூற்றுக்கு அதிபதி ,தனக்காக தன் குடும்பத்திற்காக அல்ல , தன் வேலைக்காரனுக்காக இயேசுவை நோக்கிப் பார்த்தான் .இயேசுவின் பாராட்டையும்  பெற்றான். வேலைக்காரனும் சொஸ்தமானான். பெண்களே! தனக்காக அல்ல ,பிரானுக்கானவைகளை நோக்குவானாக என்ற  வார்த்தையின் படியேயும்,இயேசு தனக்காக அல்ல ,பிறனாய் இருந்த நமக்காக தன்னையே அடிக்க ,ரத்தம் ,சிந்த மரிக்க ஒப்புக் கொடுத்ததைப் போல, பிறருக்காக இயேசு நோக்கிப் பார்க்கிற அனுபவம் அற்புதமானதே ! இது எல்லாராலும் கூடாது .ஆனாலும் செய்து பாருங்கள் .கர்த்தர் உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் .தன் சிநேகிதருக்காக ஆண்டவரை நோக்கிப் பார்த்த யோபுவின் சிறையிருப்பு மாறி ,இரண்டத்தனையாய் ஆசிர்வதிக்கப்பட்டது போல் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் .இயேசுவையே நோக்கிப் பாருங்கள்   

இந்த காலம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் !சுகமாயி ருக்கிறீ ர்களா ?நாம் வாழுகிற இந்த காலம் நாம் மவுனமாயிருக்க வேண்டிய காலம் அல்ல .சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் பெண்களே ! கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டிய வாஞ்சை விருப்பம் உள்ள நீங்கள் எழுப்புங்கள் .கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்.தயக்கம் வேண்டாம் நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் கர்த்தர் செய்ய வேண்டியதை அவர் செய்வார் .நாம் இந்த காலத்தில் மவுனமாயிருந்தால் குற்றம் நம் மேல் சுமரும் .

1.நம்பிக்கை யில்லாமல் வாழும் ஜனங்கள் :-

நம்மை சுற்றி வாழுகிற ஜனங்கள் வாழ்க்கையிலே நம்பிக்கையில்லாமல் ,வாழ வழித் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிக்கும் படிக்கே உங்களை ஆண்டவர் தெரிந்தெடுத்துள்ளார். நீங்கள் அறிவிக்காவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள் .அற்பமாய் எண்ணப்பட்ட உங்களை ஆண்டவர் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாற்ற விரும்புகிறார்.அன்று சமாரியாவின் பஞ்சத்தை மாற்ற , கர்த்தருடைய தீர்க்கதரிச வார்த்தை நிறைவேற ஆண்டவர் பயன்படுத்திய நபர்கள் அற்பமாய் எண்ணப்பட்ட 4 குஷ்டரோகிகள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.பெண்ணே! இன்று நற்செய்தி அறிவிக்க எழும்புவாயா?

2.கலக்கத்தோடு வாழும் ஜனங்கள் :-

இன்று ஜனங்கள் வாழ்வில் எத்தனையோ விதமான கலக்கங்கள் நிம்மதியில்லாத சூழ்நிலைகள் ,வியாதியினால் கலக்கம் .தேவையினால் கலக்கம் தேவ பிள்ளையே எத்தனையோ விதமான கலக்கத்தில் வாழ்ந்த உன்னை கர்த்தர் விடுவித்தார் .அல்லவா! கர்த்தர் செய்த நன்மைகளை மறைக்காமல் ,அதை நற்செய்தியாய் அறிவிக்கும்படி இன்று எழும்ப மாட்டார்களா?கலக்கத்தோடும் பயத்தோடும் இருளில் வாழ்கின்ற ஜனங்களுக்கு இயேசு என்ற ஒளியை காண்பிக்க இந்த காலத்தைப்  பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் .

3.விடுதலைக்காக ஏங்கும் ஜனங்கள் :-

இன்று விடுதலைக்காக ,சுகத்திற்காக யாராவது ஜெபிக்க மாட்டார்களா! உதவி செய்ய மாட்டார்களா! ஆறுதல் சொல்ல மாட்டார்களா என ஏங்கும் ஜனங்கள் அதிகம் . கர்த்தருடைய வருகை சமீபம் .கர்த்தர்  நம்மிடத்தில் கணக்கு கேட்கும் நாள் சமீபம் . நானோ எனக்கு என்ற நிலை மாறி ஜனங்களுக்காக பரிந்து பேசும் பெண்ணாய் ,திறப்பிலே நின்று ஜெபிக்கிற பெண்ணாய் நீங்கள் மாறுவீர்களா? அழிவுக்கு நியமிக்கப்பட்ட யூத ஜனங்களுக்காக எஸ்தர் தாதிமார் இணைந்து ஜெபித்தது போல சிறையில் அடைக்கப்பட்ட பேதுருவுக்காய் ஜனங்கள் கூடி ஜெபித்தது போல பெண்களே! விடுதலைக்காக ஏங்கும் ஜனங்களுக்காக ஜெபிப்போம்! . செயல்படுவோம்! இதுவே காலம்!

 

எழும்பு  பெண்ணே  எழும்பு

ஆண்டவராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய நாமத்தில்  பெண்களாகிய  உங்களுக்கு  என்  அன்பின்  வாழ்த்துக்கள்!. சுகமாயிருக்கிறீர்களா! பெண்களாகிய  நாம்  எத்தனையோ  விதமான  அடிமைத்தனத்திற்குள்  சிக்கிக்  கிடக்கிறோம். கவலை, சோர்வு, பலவீனம், தாழ்வு  மனப்பான்மை  என  சொல்லிக் கொன்டே  போகலாம். பெண்ணே நீ  எழும்பு. நீங்கள்  எழும்ப  வேண்டும்  என  ஆண்டவர்  எதிர்பார்க்கிறார். உங்களை  சுற்றி  நிற்கிற  பாவபாரங்களை  உதறி  தள்ளி  விட்டு எழும்புங்கள். கர்த்தர்  உங்களில்  மகிமைப்படுவார். வேதத்தில்  எழும்பின  பெண்களைக் குறித்துப்  பார்ப்போம்.

1.தெபோராள்: (நீயா 5:7,8)

தெபோராளாகிய  நான்  எழும்புமளவும், இஸ்ரவேலிலே  நான்  தாயாக  எழும்புமளவும்  கிராமங்கள் பாழாய்ப்போயின. இஸ்ரவேலின்  கிராமங்கள் பாழாய்ப்போயின. இஸ்ரவேலின் கிராமங்கள்  பாழாய்ப்போயின. நூதன  தேவர்களைத்  தெரிந்து  கொண்டார்கள். அப்பொழுது  யுத்தம்  வாசல்வரையும்  வந்தது. தெபோராள்  தன்  தேசத்திலே  ஒரு  தாயாய், தீர்க்கதரிசியாய், நியாயாதிபதியாய்  எழும்பின  போதுதான்  பாழாய்  கிடந்தவர்கள்  கட்டப்பட்டார்கள். இஸ்ரவேலை  அடிமைப்படுத்தின  சிசெரா  அழிக்கப்பட்டான். பெண்களே! எழும்புகள் அடிமைப்பட்டிருக்கிற உன்  ஜனத்தை மீட்க, பாழாய்   கிடக்கிற  கிராமங்களில்  இயேசுவின்  ஒளி  பிரகாசிக்க, நீங்கள்  ஒரு  தாயாக  எழும்புங்கள். சத்துருவை  ஜெயிப்பீர்கள். ஜனத்தின் அடிமைத்தனம்  மாறும். இன்றே  எழும்பத்   தீர்மானம்  எடுங்கள்.

 

2. நகோமி : (ரூத்  1:6)

"கர்த்தர்  தம்முடைய  ஜனங்களை  சந்தித்து  அவர்களுக்கு  ஆகாரம்  அருளினார்  என்று  அவள்  மோவாப்  தேசத்திலே  கேள்விப்பட்டு , தன்  மருமக்களோடே  கூட  மோவாப்  தேசத்திலிருந்து  திரும்பி  வரும்படி  எழுந்து ".. நகோமியின்  குடும்பம், கர்த்தர்  வைத்த  தேசத்தை  விட்டு  மோவாப்  தேசத்தில்  குடியேறினபடியால், அவள்  எல்லாரையும்  இழந்து  தனித்தவளானாள். மறுபடியும்  தன்  தேசமாகிய  யூதாவுக்கு  போகும்படி  எழுந்தாள். இழந்த  எல்லாவற்றையும், தன்  மருமகள்  ரூத்  மூலம்  திரும்பப்  பெற்றுக்  கொண்டாள். பெண்களே! கர்த்தர்  வைத்த  குடும்பம், இடம், சபையை  விட்டுச்சென்று இழந்திருப்பீர்களானால்  நகோமியைப்  போல  மறுபடியும்  திரும்பும்படி  எழும்புங்கள். இழந்ததைத்  திரும்பப்  பெறுவீர்கள்

3. அன்னாள் : (1 சாமு  1:9)

அன்னாள்  எழுந்திருந்தாள்(6,7) - ம்  வசனம்  அன்னாளுடைய சக்களத்தி  அவள்  துக்கப்படும்படி, விசனப்படுத்திக்  கொண்டே இருப்பாள். இவள்  சாப்பிடாமல்  அழுது  கொண்டே இருப்பாள். இந்த  சூழ்நிலையை  விட்டு  அன்னாள்  எழுந்திருந்தாள். பெண்களே குடும்பத்தில்  உங்களை  வார்த்தையினால், செயல்களினால்  வேதனைப்படுத்தும்  நபர்கள்  இருக்கலாம். பிரச்சனைகளையே  பார்த்து, அழுது  கொண்டிராமல், அன்னாள்  எப்படி  எழுந்து  தேவ  சமுகத்தில்  அழுது  விண்ணப்பம்  பண்ணி  அற்புதத்தைப் பெற்றுக்  கொண்டாளோ, அது  போல  உங்கள்  கண்ணீரை  தேவ  சமூகத்தில்  வடித்து, விடுதலையை, அற்புதத்தைப்  பெற்றுக்  கொள்ளும்படி  இன்றே எழும்புங்கள்.  

நமக்கு நியமித்த ஓட்டம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.சுகமாயிருக்கிறீர்களா! வேதத்தில் எத்தனையோ விசுவாசப் பெண்மணிகளைக் குறித்துப் பார்க்கிறோம்.அவர்கள் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகவே உள்ளது. நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். எல்லாருடைய வாழ்க்கையிலும் பாடுகள்,பிரச்சனைகள்,வியாதிகள்,போராட்டங்கள் உண்டு ஆனாலும் எல்லாவற்றின் மேலும் ஆண்டவர் நமக்கு ஜெயத்தைத் தருவார். நமக்கென்று நியமிக்கப்பட்டு இருக்கிற இந்த ஓட்டத்திலே நாம் எவ்வாறு ஜெயத்தைப் பெற்றுக் கொள்வது எனப் பார்ப்போம்.

1.இயேசுவையே நோக்கி ஓடுங்கள்:-

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் இயேசுவையே நோக்கி ஓடுவோம் அவரை நோக்கிப் பார்த்த முகங்கள் பிரகாசமடைந்தன. அவைகள் வெட்கப்பட்டுப் போவதில்லை. காரணம் நீங்கள் எப்படிப்பட்ட பாடுகள்,உபத்திரவத்தின் வழியாக கடந்து செல்கிறீர்களோ,அப்படிப்பட்ட பாடுகள் வழியே இயேசுவும் கடந்து சென்றார். ஏனென்றால் நமக்கு உதவி செய்யும்படி அவருடைய அடிச்சுவடிகளை தொடர்ந்து வரும்படி மாதிரியைப் பின் வைத்துப் போனார். பெண்களே!உங்கள் வாழ்வில் வரும் எல்லா சூழ்நிலையிலும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள்.ஜெயம் பெறுவீர்கள்.

 2.பொறுமையோடு ஓடுங்கள்:

நமக்கு நியமித்த ஓட்டத்தில் உங்களுக்குரிய சிலுவையை எடுத்துக் கொண்டு பொறுமையோடு ஓடுங்கள். அவசரப்படாதீர்கள். முறுமுறுக்காதீர்கள் . மற்றவர்கள் வாழ்க்கையோடு உங்கள் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்து அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். உங்களுக்கென்று கர்த்தர் தந்த குடும்பம்,கணவர்,பிள்ளைகள் இவர்களோடு பொறுமையோடு அன்போடு வாழுங்கள். இவர்கள் எல்லாம் நம்மை உருவாக்கும் சிற்பிகள். யாரையும் வெறுத்துவிடாதீர்கள்.பெண்களே! ஜெயமாய் ஓட பொறுமை நமக்கு அவசியம்.

3.விசுவாசத்தோடு ஓடுங்கள்:

விசுவாசத்தை கடைசி மூச்சுள்ளவரை காத்துக் கொள்ளுங்கள். முற்பிதாக்கள் விசுவாசத்தினாலே பெற்றுக் கொண்டவைகளைக் குறித்து எபி. 11 நாம் பார்க்கிறோம். இயேசுவிடத்தில் வந்தவர்கள் எல்லாருமே விசுவாசித்துத்தான் அற்புதங்களையும்,விடுதலையும்,சுகத்தையும் பெற்றார்கள். மேலும் விசுவாசிமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியம். கிறிஸ்தவ வாழ்க்கையே விசுவாசத்தின் அடிப்படையில்தான் உள்ளது. பெண்களே! எந்த சூழ்நிலையிலும் இயேசுவின் மேல் உள்ள உங்கள் விசுவாசம் பாதிக்கப்பட்டுவிடாதபடி, தொடர்ந்து விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள்.ஜெயத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.