வாலிபர் பகுதி

அன்பானவாலிபபிள்ளைகளே

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் இயேசப்பாவின் பெரிதான கிருபையினால் மகிழ்வாக இருபீர்கள் என்று நம்புகிறேன். அன்பான பிள்ளைகளே கடந்த ஆண்டு முழுவதும் ஒரு கோழி தன் குஞ்சுகளை தன் செட்டையின் கீழ் மறைத்து பாதுகாப்பது போல் நம்மை நம் இயேசப்பா எல்லா தீங்குக்கும் விலக்கி நம்மை பாதுகாத்து வந்த தற்காய்கர்த்தருக்கு நன்றி.

இந்த புதிய ஆண்டில் நம்மை பாதுகாத்து உயர்த்துவார். இவ்வுலகத்தில் மனிதர்கள் நம்மிடம் கொடுத்த வார்த்தைகள், வாக்குகள் மாறியிருக்கலாம் அனால் நிலையானது என்றும்மாறாது நம் இயேசுவின் வார்த்தைகளும், வாக்குத்தத்தங்கள் மட்டுமே. இந்த ஆண்டில் கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றியேதீருவார். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் அவரைத்துதியுங்கள் .


ஆபிரகாமின் வாக்குத்தத்தம்

ஆம் பிள்ளைகளே கர்த்தர் ஆபிரகா முக்கு கொடுத்த வாக்குதத்தத்தை நிறைவேற்றியதால் அவர் வாக்குத்தத்தின் தேவன் என்றென்னப்பட்டார் .ஏனெனில்வானம், பூமி நிலைமாறினாலும் அவருடைய வார்த்தைகள் ஒரு நாளும் ஒழியாது. அவர் சொன்னதை செய்யும் தேவன் .ஆதியாகமம் 28:15 ல் " நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னைக்கைவிடுவதில்லை" என்றுசொல்லப்பட்டுள்ளது. ஆம் கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தமாக என்ன சொல்லியிருக்கிறாரே அதைக்கட்டாயம் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் .ஏனெனில் 10:23 ல் சொல்லப்பட்டுள்ளபடி "வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர்மனம்மாறமனுஷன் அல்லவேகர்த்தர் உங்களுக்கு கொடுத்தவாக்குத்தத்ததை விசுவாசியுங்கள் அவற்றை அறிக்கை செய்யுங்கள் நிறைவேற ஜெபியுங்கள் நிச்சயம்நிறைவேற்றுவார்.மீண்டும் காட்டுவார்

அன்பான வாலிபப்பிள்ளைகளே !

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் மார்ச் ,ஏப்ரல் மாதம் என்றாலே அது பரீட்சை மாதம் .படிக்கிற பிள்ளைகளுக்கு இது ஒரு முக்கியமான கால கட்டம் அரசாங்க தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகள் மத்தியில் ஒருவித பரபரப்பு காணப்படும். நாட்களை எண்ணிக் கொண்டே இருப்பார்கள். தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளே நீங்க இயேசப்பாவின் பிள்ளைகள் ஆகவே எதற்கும் கலங்கமாட்டீர்கள் என்று விசுவாசிக்கிறேன் .நம் தேவனை ஊக்கமாய் தேடும் போது அவர் உயர்வுகளை எல்லா காரியங்களிலேயும் அவருடைய அன்பினிலும் ,வார்த்தியினாலும் மீண்டும் கட்டி எழுப்புவார்.ஆம் பிள்ளைகளே ஒரு வேளை இந்த உலகின் பாடுகள் ,நெருக்கங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கி மிகவும் கலங்கி தவிக்கிறீர்களோ ? அந்தப் பாடுகள் உயர்வுக்கும் ,கர்த்தருக்கும் உள்ள உறவில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதா? கலங்காதிருங்கள். காலமெல்லாம் வழி நடத்தும் கர்த்தர் நம்மோடு கூடவே வருகிறார் .

அன்பினால் காட்டுவார் :-

பிள்ளைகளே உங்கள் பெற்றோர்கள் ,சகோதர சகோதரிகள் உற்றார் , உறவினர்களின் அன்பை நம்பி அவர்களின் பின்னால் சென்று அந்த அன்பு மாயை என்று .தெரிந்து நிம்மதி இல்லாமல் காணப்படுகிறீர்களா? மனிதர்களின் அன்பு பொய்யானது.கர்த்தரின் அன்போ என்றென்றும் நிலையானது .நீங்கள் நேசித்தவர்களின் அன்பு உங்களுக்கு கிடைக்காமல் போனாலும் கலங்க வேண்டாம் .உங்களை இரட்சித்து உங்களுக்காய் இவ்வுலகில் பாடுபட்ட  கர்த்தரின் அன்புக்கு நேராய் திரும்புங்கள் .அவரை மட்டுமே நேசியுங்கள்.அவர் எப்போது ஒரே மாதிரியாய் நேசிக்க வல்லவர் .துயரம் வேண்டாம் ,திடன் கொள்ளுங்கள் .உபா.7:9 ல் கர்த்தரே தேவன் என்றும் ,அவரில் அன்பு கூர்ந்து தமது கற்பனைகளை கைக் கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கைகளையும் தயைவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அவரை முழுமையாய் நம்பி அவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு உண்மையுள்ள தேவனிடத்தில் திரும்பும் போது அவர் தம் அன்பினால் உங்களை கட்டிஎழுப்புவார்.நீங்கள் ஆவியினாலே பெலனடைவீர்கள்.

வசனத்தினால் கட்டுவார் :-

அன்பான பிள்ளைகளே நம் இயேசுவின் வார்த்தைகள் சுத்தமானவைகள் ஒரு வேளை இவ்வுலக மனிதர்களின் வார்த்தைகளை நம்பியிருக்கலாம் .அந்த நம்பிக்கை பொய்யாய் போயிருக்கலாம் .சோர்ந்து போய் விடாதிருங்கள். அந்த மாயையான வார்த்தைகளை மறந்து  நம்மை அழைத்தவரும் ,இரட்சித்து பாதுகாத்தவருமான நம் தகப்பனாகிய இயேசுவின் வார்த்தைகளை அதிகமாய்  நேசித்து வாசியுங்கள்.உங்களுடைய இருதயம் சந்தோஷமாய் ,சமாதானமாய் காணப்படும் .அவருடைய வார்த்தைகளை உங்கள் சிந்தனையினால் உணர்ந்து நாவினால் அறிக்கையிட்டுக்  கொண்டிருங்கள்.அவர் தம் வார்த்தையினால் உடைந்து போன உங்களை மீண்டும் கட்டிஎழுப்புவார்.சங். 119:25 ல் சொல்லப்பட்டுள்ள படி உமது வசனத்தின் படி என்னை உயிர்ப்பியும் என்று ஜெபியுங்கள் .அவர் உங்களை சங்.119:28 ன் படி உங்களை கட்டியெழுப்பி நிலை நிறுத்துவார். அல்லேலூயா !

சர்வவல்லமையுள்ள தேவனே

அன்பான வாலிபப் பிள்ளைகளே !

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்எல்லாரும் சுகமாய் இருக்கிறீர்களா?.மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என நினைக்கிறேன். சந்தோஷமாக இருங்கள். இவ்வுலக காரியங்கள் ஒன்றைக்குறித்தும் கவலைப்படவேண்டாம். ஏனெனில் வானத்திலும் ,பூமியிலும் மேலான சர்வ வல்லமையுள்ள கர்த்தரை நாம் பற்றிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு நிகரானவர் ஒருவருமில்லை. ஆதலால் கலங்க வேண்டாம். ஆதியாகமம்.17:1 ல் நான் வல்லமையுள்ள தேவன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

மரணத்தை ஜெயித்தார் :

ஆம் பிள்ளைகளே நம்முடைய பாவங்களுக்காக தேவன் சிலுவையை சுமந்து ,அடிக்கப்பட்டு பின்பு அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிர்த்தார். இது இயற்கையான நிகழ்வு அல்ல. இயற்கைக்கும் அப்பாற்பட்ட உண்மை . மரணத்தை ஜெயித்து உயிர்த்த தேவனை நாம் நம்பியிருக்கிறோம். ஆதலால் நீங்கள் நடந்து முடிந்த எதைக்குறித்தும் கலங்க வேண்டாம். இது என்னாகுமோ ? எப்படி முடியோமோ ?என்று செய்வது அறியாமல் திகைத்துக் கொண்டிருக்கலாம். மரணத்தை ஜெயித்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடிருக்கிறார் . ஏசாயா .25:8-ல் அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார். கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார்  என்று சொல்லியிருக்கிறார். ஆகவே உங்களுக்கு எதிரான எல்லா பிரச்சனை போராட்டங்களும் நம்முடைய சர்வ வல்லமையுள்ள தேவனாலே ஜெயமாய் மாறும்.

பாதாளத்தை வென்றவர் :-

நம்முடைய இயேசு மரித்து அப்படியே இருக்கவில்லை அவர் அடக்கம் பண்ணப்பட்டு பாதாளம் அவரை மேற்கொள்ளாதபடி மீண்டும் உயிர்த்து சீடர்களுக்கு காட்சியளித்தார்.அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த வானமும் ,பூமியும் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது . ஆதலால் சோர்ந்து போன ,களைத்து போன நீங்கள் இனி எழும்புவதில்லை என்று விடாய்த்திருக்கலாம். இல்லை பிள்ளைகளே உங்களுடன் பாதாளத்தையேவென்ற சர்வ வல்லமையுள்ள தேவன் நமக்கு அடைக்கலமாய் இருக்கிறார். மத்தேயு. 16:18 -ல்  பாதாளத்தின் வாசல்களை அதை மேற்கொள்வதில்லை  என்று சொல்லியிருக்கிறார்<

 கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள்

அன்பான வாலிபப்பிள்ளைகளே இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் !

எப்படியிருக்கீங்க பிள்ளைகளே ? கோடை விடுமுறையை பயனுள்ளதாய் அனுபவித்தீர்கள் என்று நினைக்கிறேன். தேர்வு முடிவுகள் வெளிவரும் மாதம் தேர்வுகளில் கர்த்தர் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தருவார் .நீங்கள் கர்த்தரை மட்டுமே சார்ந்து கொள்ளும் போது அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் .உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் உங்கள் சிநேகிதர்களையோ உற்றார் உறவினர்களையோ நம்பி அவர்களை சார்ந்து விடாதிருங்கள் .ஏனெனில் அவர்களும் மனிதர்களே ! எந்த சூழ்நிலையிலும் உங்களைக் கைவிடலாம் .ஒரு போதும் கைவிடாத நேசர் உங்களை காத்துக் கொள்வார் .

பிரச்சனைகளில் :-

உங்கள் பிரச்சனையான நேரங்களில் கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள் உங்கள் வேலை ,படிப்பு ,எதிர்காலம் என ஏதுவாகிருந்தாலும் கர்த்தரையே மட்டுமே சார்ந்து கொள்ளும் போது பிரச்சனைகளிலிருந்து விடுதலை தருவார் .சங். 62:8 ல் எக்காலத்திலும் அவரை நம்புங்கள் .அவர் சமூகத்தில் இருதயங்களை ஊற்றிவிடுங்கள் .அவரே நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.ஆம் பிள்ளைகளே !பிரச்சனையான நேரங்களில் நீதி.3:5 ல் சொல்லப்பட்டுள்ள படி உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதிருங்கள் .ஏனெனில் முடிவெடுக்கும் மனநிலையில் நீங்கள் சார்ந்து கொள்ளும் போது 100 % கர்த்தர் சரியாய் நம்மை நடத்துவார்

போராட்டங்களில்:-

போராட்டமான சூழல் அவ்வப்போது வந்து செல்லலாம். கர்த்தரை அண்டிக் கொள்ளுகிற நானும் நீங்களும் எவ்வித சூழ்நிலையையும் தைரியமாய் சந்திப்போம் .தாவீது கோலியாத்தை எதிர்த்து நிற்கையில் தன்னுடைய பலவீனத்தையோ ,கோலியாத்தின் பலத்தையோ ஒரு பொருட்டாக எண்ணவேயில்லை .கர்த்தர் தாவீதுக்கு பெலத்தை கொடுத்து வெற்றியை தந்தார் .போராட்டமான சூழ்நிலையில் யாராவது நமக்கு உதவி செய்து விட மாட்டார்களா? என எதிர் பார்ப்போம். சுய முயற்சி உங்களை தோற்கடிக்கச் செய்து விடும் .அவரை பற்றி கொண்டிருக்கும் போது எல்லாவித போராட்டங்களில் வெற்றியைக் காண முடியும். 2 நாளா 20 ம் அதிகாரத்தில் யோசபாத்துக்கு மிகப் பெரிய ஆபத்தான நெருக்கடி ஏற்பட்ட போது ,எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் கர்த்தரை மட்டுமே சார்ந்து கொண்டு உபவாசித்து தேவனை தேடியதால் வெற்றி பெற்றார் என்பதை வாசிக்கலாம் . உங்களுடைய பிரச்சனை ,போராட்டங்களில் கர்த்தரை மட்டுமே சார்ந்து கொள்ளும் போது 2 நாளா 15:2 ல் சொல்லப்பட்டுள்ள படி அவர் உங்களுக்கு வெளிப்படுவார் .அல்லேலூயா  

தேடி பெற்றுக் கொள்ளுங்கள்

அன்பான வாலிபப்பிள்ளைகளே!இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்! இயேசப்பாவின் கிருபையால் எல்லாரும் நன்றாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.நாம் ஒவ்வொருவரும் எல்லா காலங்களிலும் ஏதேனும் ஒரு தேவையோடுதான் இருக்கிறோம்.எதையாவது ஒன்றை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அது நல்லது தான்! யாருடைய வாழ்க்கையில் தேடுதல் இல்லை.எல்லாம் எனக்கு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் முன்னேற முடியாது.என்ன? முதலாவது இயேசுவின் நாமத்தை தேடுங்கள்.பின்பு நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் எதில் குறைவுள்ளவர்களாய் காணப்படுகிறீர்களோ அதை தேடி கண்டுபிடித்து நிறைவாக்கிக் கொள்ளுங்கள்.சிலருக்கு கணிதம் வராது.சிலருக்கு ஆங்கில அறிவில் குறைவாய் காணப்படலாம்.போட்டித் தேர்வுக்கு தயாராகிற உங்களுக்கு பொது அறிவு நாட்டு நடப்பு(Current Affiars)தெரியாமல் இருக்கலாம்.நீங்கள் தேவனைத் தேடும் பொழுது இவையெல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தேடுங்கள்:-

பிள்ளைகளே வேதாமகத்தில் உபாகமம் 4:29ல் முதலாவது தேவனை முழு இருதயத்தோடும்,முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும் பொழுது கண்டடைவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.தேடுதல் சாதாரணமாக இருக்கக் கூடாது.முழு இருதயத்தோடு தேடும் பொழுது மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.மத்தேயு 7:7ல் தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் எதையாவது ஒன்றைப்பெற்றுக்கொள்ள,தேடும் பொழுது மட்டுமே கிடைக்கும்.தேடுதல் தீவிரமாயும்,தொடர்ந்தும்,ஒரே நோக்கில் இருக்கும் பொழுது விரைவாக பெற்றுக் கொள்ள முடியும்.மேலோட்டமான தேடுதல் பலன் தராது.நீதிமொழிகள் 8:17ல் வசனத்தில் அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள் என்று சொல்லப்பட்டடிருக்கிறது.ஆகவே குறித்த நேரத்தில் தேடுங்கள்.ஏசாயா 5:56ல் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.ஆகவே சரியான குறித்த நேரத்தில் நீங்கள் தேடும் பொழுது எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வீர்கள்.

பெற்றுக் கொள்வீர்கள்:-

நீங்கள் உறுதியாய் தேடும் பொழுது நிச்சயமாய் பெற்றுக் கொள்வீர்கள்.மேலே சொன்னபடி நீங்கள் கர்த்தரைக் தேடும் பொழுது இவ்வுலக ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இலகுவாக பெற்றுக் கொள்வீர்கள்.அது மட்டுமல்ல பிள்ளைகளே!நீதிமொழிகள் 11:27ன் படி நன்மையை ஜாக்கிரதையாய் தேட வேண்டும்.ஜாக்கிரதையாய் தொடர்ந்து தேடும் பொழுது பெற்றுக் கொள்ள முடியும்.2நாளாகமம் 26:5ல் உசியா ராஜா தேவனைத் தேடின காலங்களில் அவருக்கு தேவனுடைய பலமும்,உதவியும் கிடைத்தது.அது போல உங்கள் குறைவுகளையெல்லாம் நிறைவாக்க தேவனை முழு இருதயத்தோடும்,தொடர்ந்து ஜாக்கிரதையாய் தேடும் பொழுது கர்த்தரிடத்தில் இருந்து உங்களுக்கு தேவையான அறிவு,ஆஸ்தி ,பெலன்,சமாதானம் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வீர்கள்!அல்லேலூயா!

 

                                                         வித்தியாசப்படுத்துவார்

அன்பான வாலிபப்பிள்ளைகளே !

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ! எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா ? அதற்குள்ளாக 8 ம் மாதம் வந்து விட்டது. புதிய மாதத்திற்குள் நம்மைக் கர்த்தர் அருமையாய் கூட்டிச் சேர்த்தித்திருக்கிறார்.காலம் விரைவாக ஓடிக் கொண்டேயிருக்கிறது .கர்த்தர் நமக்கும் வேறு ஜனங்களுக்கும் வித்தியாசத்தை உண்டாக்குவார் .பிள்ளைகளே இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜனத்தை  போல நாம் அல்ல .நாம் வேறுபட்டவர்கள்.ஜீவனுள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம் .அவர் நம்மை தெரிந்து கொண்டுள்ளார்.நாம் விசேஷித்தவர்கள் .ஆகவே அவர் நமக்கும் அவரை அறியாத ஜனங்களுக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணுவார்.

வாழ்க்கையில் வித்தியாசம் :

ஆம் பிள்ளைகளே உங்கள் நண்பர்களோ அல்லது  உறவினர்களோ உங்கள் வாழ்க்கையில் உள்ள சூழ்நிலையைப்  பார்த்து கர்த்தர் ,இயேசு என்று சொன்னான் எண்ணத்தைக் கண்டான் ? நம்மைப் போல தானே அவனும் இருக்கிறான் என்று உங்களைப் பார்த்து ஏளனமாக பேசலாம் .நம் கர்த்தர் பெரியவர் என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் ஜனங்கள் பார்த்து அதிசயிக்கத்தக்க நம்மை எல்லாவற்றிலும் வித்தியாசப்படுத்துவார். உதாரணமாக  தானியேல் (தானி. 1:8) ன் படி எல்லாரைப் போல் உலகத்திற்காக இயேசுவுக்கு பிரியமில்லாத காரியத்தைச் செய்யாததினால் அவனை வித்தியாசப்படுத்தி உயர்த்தினார்.உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள கூட்டத்திலிருந்து வித்தியாசப்படுத்தி உயர்த்துவார். அதற்கு நீங்கள் தானியேல் போல, உங்களைத் தீட்டுபடுத்தாமல் தேவனுக்கு பிரியமான ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் அப்பொழுது உயர்த்தப்படுவீர்கள்.

தொழிலில் வித்தியாசம் :-

ஒரு வேளை நீங்கள் படித்து கொண்டிருக்கலாம். அல்லது பணி புரிந்து கொண்டிருக்கலாம் .நீங்கள் செய்யும் தொழிலில் ,அல்லது படிப்பு காரியங்களில் உண்மையாயிருந்து கர்த்தருக்கு பிரியமாய் நடப்பீர்காளானால் கர்த்தர்  உங்களை தொழிலையும் ,படிப்பையும் ஆசீர்வதித்து நல்ல பலனை தருவார்.சிலர் மிகவும் கடினமாக உழைக்கலாம் அல்லது படிக்கலாம் ஆனால் அதன் பலனோ குறைவாக காணப்படும் .இயேசப்பாவின் அன்பான பிள்ளைகளான உங்கள் அனைவரையும் மற்ற கூட்டத்தாரிடத்திலிருந்து  ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி உங்களுடன் இருக்கும் தேவன் மட்டுமே பெரியவர்.சிறந்தவர் என்பதை மற்ற ஜனங்கள் கண்டு கொள்ளத்தக்கதாய் ஒரு பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணுவார் .

மேலே சொன்ன எல்லாவற்றிலும் வித்தியாசத்தை நான் காண ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு நாம் செய்ய வேண்டியது கர்த்தரை முழுமனதோடு தேடி ,அவருடைய வார்த்தைகளுக்கு உட்பட்டு கீழ்படிந்து நடக்கும் போது மட்டுமே கர்த்தர் நம்மை வித்தியாசப்படுத்தி உயர்த்துவார் .அல்லேலூயா !

தயவை நாடுங்கள்

அன்பான வாலிபப்பிள்ளைகளே !

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்! இம்மட்டும் நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்து நம்மை சேதமின்றி பாதுகாத்து ,போஷித்து வருகிறார். தொடர்ந்து நடத்துவார். நாம் எப்பொழுதும் அவருடைய தயவை பெற்றுக் கொள்கிறவர்களாக காணப்பட வேண்டும். உங்களுடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களுடைய கஷ்டமாக சூழ்நிலையில் உங்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நீங்கள் மேன்மையை பெற்றவுடன் எல்லோரிடமும் நான் தான் உதவி செய்தேன் என்று தெரியப்படுத்தி, உங்களின் உயர்வுக்கு அவர்கள் தான் காரணம் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆம் பிள்ளைகளே, நம் இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவரல்ல . உறவுகளின் உதவிக்கு பின்னால் நிச்சயமாய் ஒரு சுய நலம் உண்டு.  ஆனால் நம்முடைய தேவன் பிரதி பலன் பாராதவர். நம் தேவையை அறிந்து நமக்கு தயை செய்பவர் நம் இயேசு கிறிஸ்துவானவர் மட்டுமே ,

கர்த்தர் தயவை நாடுங்கள் :

ஆம் பிள்ளைகளே உங்களின் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருடைய தயவை மட்டுமே நாடுங்கள். வேதத்தில் சொல்லப்பட்டுள்ளபடி "இக்கட்டில் மனுஷனுடைய உதவி விருதா " மனுஷனுடைய தயவு நாடகமே ,சந்தர்ப்ப வசமானது அது பொய்த்து விடும். மாய்மாலமான உதவி. அப்படிப்பட்டவர்களின் தயவை நாடினால் ஏமாற்றமே மிஞ்சும் .மாற்கு .10:46 ம் வசனம் முதல் பர்திமேயு எனும் பிறவிக் குருடன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அவன் வழியருகே அமர்ந்து பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வழியே  அநேகர் சென்றிருக்கலாம். அவன் யாருடைய தயைவையும் நாடவில்லை. இயேசு வருகிறார் என்பதை கேள்விப்பட்டு அவரைக் கூப்பிடடான். சுற்றியிருந்தவர்கள் அதட்டியதை அவன் பொருட்படுத்தாமல் இன்னும் அதிகமாய் சத்தமிட்டு கூப்பிட்டான். கர்த்தர் அவனுக்கு தயை செய்து பார்வையடையச் செய்தார். நீங்களும் உங்களுடைய இக்கட்டில் மனுஷர் உதவிகளை நாடாமல் கர்த்தரின் தயவை நாடுங்கள்.

நன்றியுள்ளவர்களாயிருங்கள் :

ஆம் பிள்ளைகளே பர்திமேயு கண்பார்வை பெற்றவுடன் உறவுகளையும், நண்பர்களையும் பார்க்க சென்றுவிடவில்லை .மாற்கு 10:52 ல் சொல்லப்பட்டுள்ளபடி அவன் பார்வை கொடுத்த இயேசுவுக்கு பின் சென்றான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் கர்த்தரிடத்தில் இருந்து அநேக இரக்கத்தையும் உதவிகளையும் பெற்றுக் கொண்ட பின் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கும் போது மட்டுமே கர்த்தருடைய தயவை தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் .பர்திமேயு போல கர்த்தரைத் தொடருங்கள் .அல்லேலூயா !

தயவை நாடுங்கள்

அன்பான வாலிபப் பிள்ளைகளே ! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ! எல்லோரும் எப்படி இருக்கீங்க ? இதோ ஒரு புதிய மாதத்தில் கர்த்தர் நம்மை கூட்டி வந்திருக்கிறார். நம்மைச் சுற்றியும் நமக்கு பாதுகாப்பு அளித்து நம்மைப் பாதுகாத்து நடத்திவரும் நம் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். தினம் தினம் நம்மைச் சுற்றிலும் அநேக பிரச்சனைகள் , போராட்டங்கள் ,அன்பான பிள்ளையே ! அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு போராட்டமும் நம்மை அழித்துவிடாதபடி கர்த்தர் நமக்கு அக்கினி மதிலாய் இருந்து வருகிறார். நம்முடைய தேவன் நம்மை பாதுகாக்கவில்லை எனில் நம் நிலைமையை சற்று சிந்தியுங்கள். குடும்பம் வேலைஸ்தலம், கல்லூரி ,பள்ளி ,எல்லா இடங்களிலேயும் பிரச்சனைகள் நம்மை அமிழ்த்துவிடாதபடி கர்த்தர் நமக்கு வேதாகமத்தில் சகரியா 2:5ல் சொல்லியபடி நமக்கு சுற்றிலும் அக்கினி மதிலாய் இருந்து நம்மை பாதுகாக்கிறார்.

அக்கினி மதிலாய் கர்த்தர் நம்மைச் சுற்றிலும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? நம்முடைய கர்த்தரின் தேவ மகிமை நம்மில் காணப்பட வேண்டும் .தேவ மகிமையை பெற்றுக்கொள்ள பிள்ளைகளே முதலாவது கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களில் இருந்து விலகுங்கள். முன்பு தீய நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர்கள் கெட்டு கர்த்தருக்கு பிரியமில்லாத வழியிலே சென்று விடுவார்கள் .ஆனால் பிள்ளைகளே இன்றைய தேதியில் உங்களிடம் உள்ள தொலைபேசி (செல்போன் )மட்டுமே போதுமானது. அநேகமாயிரம் பிரச்சனைகள் கணினி ,மற்றும் செல்போன் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளும் போது மட்டுமே கர்த்தர் அக்கினி மதிலாய் இருந்து உங்களைப் பாதுகாப்பார்.

வாலிபப் பிள்ளைகளே கர்த்தர் மேல் வைராக்கியமாய் இருங்கள். அவர் உங்கள் மேல் பற்றுதலாய்  இருப்பார். சாத்ராக் ,மேஷாக் ஆபேத்நேகா ஆகியோர் தங்கள் ஜீவன் போகிற அளவு பிரச்சனைகள் ஏற்பட்ட போதும் அவர்கள் சோர்ந்து போகவே இல்லை. அவர்கள் கர்த்தர் மேல் வைத்திருந்த விசுவாசத்திலும் தளர்ச்சியடையவில்லை. அந்த அளவிற்கு கர்த்தர் மேல் அவருடைய அன்பின் மேல் வைராக்கியமாய் இருந்தார்கள். ஒருவேளை அவர்கள் தங்களுக்கு வந்த ஆபத்தைப் பார்த்து பயந்து உலகப்பிரகாரமாய் சிந்தித்து முடிவு எடுத்திருந்தால் கர்த்தர் அவர்களுக்கு அக்கினி மதிலாய் இருந்து பாதுகாத்திருக்க முடியாது. ஆனால்                                                                   அதிகாலை ஜெபம்

             அன்பான வாலிபப் பிள்ளைகளே! இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா?. மழைக் காலம் தொடங்கி விட்டது. காலையில் நல்லா குளிருதுன்னு நல்லா 7.00 மணி வரைக்கும் தூங்குகிறீர்களா?. வேண்டாம், கொஞ்சம் சிரமப்பட்டு காலையில் எழும்பி நம்முடைய இயேசப்பாவை தேடினீங்கன்னா, உங்க வாழ்க்கையில் எல்லாமே இனி அற்புதம், அதிசயம் தான் . காலையில் எழுவது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பலப்படுத்துவதோடு, நம்முடைய உடல் நலம், மற்றும் மனநலத்தையும் காக்கிறது. அதிகாலையில் எழும்பி ஜெபிக்கும் போது அந்த நாள் முழுவதும், புத்துணர்ச்சியோடு இருக்க முடியும். அதிகாலையில் எழும்பி, வேதம் வாசித்து, துதித்து, ஜெபிக்கும் போது உங்களுக்குள்ளே ஒரு மன நிம்மதியைக் காண முடியும். எது வந்தாலும் என் இயேசப்பா பார்த்துக் கொள்வார் என்கிற மன தைரியம் வந்து விடும். சோம்பேறியைக் குறித்து வேதாகமத்தில் நீதிமொழிகள் 20:4 ல் "சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான். அறுப்புக் காலத்திலே பிச்சைக் கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங் கிடைக்காது."   ஆம் பிள்ளைகளே குளிருக்கிறது என்று உழவு செய்யா விட்டால் ஒரு விளைச்சலையும் பெற முடியாதுநீங்கள் குளிரைப் பொருட்படுத்தாமல் அதிகாலையில் எழும்பி சுறுசுறுப்பாய் கர்த்தரை துதித்து, ஜெபித்து வேதம் வாசித்து நடப்பீர்களென்றால் கர்த்தர் உங்கள் படிப்பு, வேலை, திருமண காரியங்களில் உங்களை மேன்மையாக நடத்துவார்.

அதிகாலையில் துதித்தல் :

               ஆம் பிள்ளைகளே! அதிகாலையில் எழும்பி, கர்த்தர் உங்களுக்குத் செய்த நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி சொல்லி அவரைத் துதியுங்கள். நீங்கள் துதிக்க, துதிக்க உங்களிடம்  காணப்படும் சோம்பேறித்தனம் விலகி கர்த்தரைத் தேடும் வாஞ்சை அதிகரிக்கும். கர்த்தர் எனக்கு ஒரு நன்மையும் செய்ய வில்லை என்று யாரும் கூறிவிட முடியாது. இப்பொழுது இதை வாசிக்கும் போது கூட கர்த்தரின் கிருபை, இரக்கம் நம்மோடு கூட இருப்பதால் தான் நாம் இந்த உலகில் ஜீவிக்கிறோம். நம் கர்த்தர் துதிகளில் பிரியப்படுகிறவர். நீங்கள் அதிகாலையில் எழும்பி துதித்துப் பாருங்கள். உங்கள் இருதயம் இலகுவாகும். எதைக் குறித்தும் கவலைப்படாது. எனக்கு உதவ என் இயேசப்பா உண்டு  என்று மகிழ்ந்திருக்கும் அப்போஸ்தலர் 16:25 ல் பவுலும்,சீலாவும் நடுராத்திரியில் துதித்து பாடும் போது அவர்களுக்கு விடுதலை உண்டானது. சிறைச்சாலையில் நிச்சயமாக சந்தோசமாக இருந்திருக்க முடியாது. அந்த மோசமான சூழலிலும், துதிக்கும் போது விடுதலை அடைந்தார்கள். கர்த்தரைத் துதிக்கும் போது நமக்கு கிடைக்கும் சமாதானத்தையும்சந்தோஷத்தையும் எந்த துன்பத்தாலும், சரீர வேதனையினாலும் அழித்து விட முடியாது. அதிகாலையில் துதித்துப் பாருங்கள்.

அதிகாலையில் வேதம் வாசித்தல் :-

                அன்பான பிள்ளைகளே ! ஜெபம் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று வேத வாசிப்பும் கண்கள் - பரிசுத்தம்

அன்பான வாலிபப் பிள்ளைகளே !

                                இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறீர்களா? மழைக்காலத்தில் ஏற்படும் வியாதிகள் பரவிக் கொண்டிருக்கிறது.  இந்நாட்களில் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற சரீரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சங்கீதம் 139 : 16  ன் படி நம்முடைய அவயங்கள் இல்லாதபோதே, அவை அனைத்தும் உருவாகும் நாட்களையும்  முன்பே குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், பிள்ளைகளே! இந்த முழு  சரீரமும் கர்த்தர் கொடுத்தது. இதனை பரிசுத்தமாய் பாதுகாப்பது நம்முடைய கடமை.

              அவயங்களில் மிகவும் முக்கியமானது கண்கள். கண்களை பரிசுத்தமாய் காத்துக் கொண்டால், முழு சரீரமும் சரியாய் இருக்கும். அதுவும் வாலிப நாட்களில் கண்களால் வரும் பிரச்சனைகளும் , போராட்டங்களும் அதிகமாய் காணப்படும்கண்களை அசுத்தத்திற்கு விலக்கி காத்துக் கொள்ளும் போது  நம் இயேசப்பாவுக்கு பிரியமாய் நடக்க முடியும்.

பரிசுத்தக் கண்கள் : -

            நாம் நம்முடைய கண்களை பரிசுத்தமாய் பாதுகாக்கும் போது  முழு சரீரமும் பரிசுத்தப்படும். எனவே கண்களின் காட்சிகளை செம்மைப் படுத்த வேண்டும். நீதிமொழிகள் 15 : 30 ல் கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆம், பிள்ளைகளே! கண்கள் நல்லவற்றை நோக்கும் போது, இருதயத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தீயவற்றை நோக்கும் போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும்ஆனால் அது பார்த்த நேரத்தில் கிடைக்கிற மகிழ்ச்சி. அது நிரந்தரமல்ல. அது முழு சரீரத்தையே இருளாக்கி விடும். ஆகவே உங்கள் கண்களின் பரிசுத்தத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உபாகமம் 28 : 34 ல் உன் கண்கள் காணும் காரியங்களில் மதி மயங்கி போவாய் என்று சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு மதிமயங்காமல் இருக்க கண்களின் காட்சி சரியாக இருக்கும் போது பரிசுத்தம் பேண முடியும்.

மேட்டிமையான கண்கள் :-

                                நீதிமொழிகள் 30 : 13 ல் அவர்கள் கண்கள் மேட்டிமையும், அவர்கள் இமைகள் நெறிப்புமானவைகள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேட்டிமையான கண்கள் வேண்டாம். அவை அகந்தையான சிந்தையை உருவாக்கும். நீதி 21: 4 ல்   மேட்டிமையான பார்வை பாவம் என்று சொல்லப்பட்டுள்ளது. மேட்டிமையான (பெருமையான) கண்கள் உடையவர்களாயிருந்தால் தேவனை விட்டகன்று  விடுவோம். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் நியாயத் தீர்ப்பு நாளில் பயங்கர வெட்கத்தை கொடுப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது

வெற்றி 

கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிப நண்பர்களே!  

இந்த 2019 ம் ஆண்டு, உங்களுக்கு மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் வாழ்த்துகிறேன்!.

                 வெற்றிகரமான வாழ்கை என்றால் என்ன? அல்லது வெற்றி என்றால் என்ன அர்த்தம்?  இதற்கு பல பதில்கள் உண்டு. ஆனால் பொதுவாக பார்ப்போம். ஆனால் நாம் எதை திட்டமிட்டோமோ, அல்லது எதிர்பார்த்தோமோ அது நடந்தால் வெற்றி என எண்ணுகிறோம். ஆனால் அதை அடைவது கடினமாகதான் இருக்கிறது. நான் வேதகாமத்திலிருந்து வெற்றிகரமான வாழ்கை அடைந்த ஒரு நபரைக் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

                யாக்கோபின்  மகன் யோசேப்பு. அவருடைய தந்தை, தன் வயதான காலத்தில், தனக்கு பிடித்த மனைவி ராகேலுக்கு பிறந்த முதல் மகன் யோசேப்பு , ஒரு நம்பகமான, உண்மையுள்ள, கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு வாலிபனாக இருந்தான். சகோதரர்கள் வெறுத்ததால் அடிமைத்தனத்திற்கு விற்க்கப்பட்டான். அவனுடைய அடிமை தனத்திலும் கூட, யோசேப்பு உண்மையுள்ளவனாய் இருந்தான். வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு பிறகு அவன் வெற்றி பெற்றான். கனவுகளை விளக்குவதற்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஆற்றலின் காரணமாக,யோசேப்பு வெற்றிகரமாக பார்வோனின் கனவுகளை விளக்கினான். (ஆதியாகமம் 41: 14 - 36) மேலும் எகிப்தின் இரண்டாவது அதிக சக்தி வாய்ந்த ஆட்சியாளராக பதவி உயர்வு பெற்றார்.   ( ஆதியாகமம் 41: 37 - 45 ). நாம் யோசேப்பின் வெற்றிகரமான இந்த வாழ்க்கையிலிந்து சில காரியங்கள் கற்றுக் கொள்வோம்.  

1. எல்லாவற்றிலும் கர்த்தரையே நம்புங்கள் :- இன்று ஒரு விசை நம்மை சரிபார்ப்போம். நம்முடைய நம்பிக்கை, எங்கே இருக்கிறது?. நாம் அநேக நேரங்களில், நாம் நம்முடைய நம்பிக்கையை உலக பிரகாரமான பணத்திலோ, சொத்துக்களிலோ, திறமையிலோ, படிப்பிலோ, குடும்ப உறுப்பினர்கள் மேலோ, நண்பர்கள் மேலோ, பதவி உயர்ந்த மனிதர்கள் மேலோ வைத்து விடுகிறோம். ஆனால் யோசேப்பு என்ன செய்தார்? (நீதிமொழிகள் 3 :5, 6) இந்த வசனம் சொல்லுவது போல, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம்  அவரை நினைத்துக் கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார். முழு நம்பிக்கையையும் கர்த்தர் மேல் வைத்திருப்பதே உன் வாழ்க்கையின் வெற்றிக்கு ரகசியமாய் இருக்கிறது.  

2. திறமையைக் காட்டிலும் நல்ல சுபாவங்களே (குணங்களே) வெற்றிக்கு முக்கியம் :-  இன்றைய தொழில் துறையில், வேலை செய்பவர்களிடம் பல அடிப்படை திறமைகளை எதிர்பார்க்கிறார்கள். (எடுத்துக்காட்டு): எளிதில் பழகக் கூடிய தன்மை, சூழ்நிலைக்கு தக்க, தங்களை வேலை செய்யக் கூடிய தன்மை, தகவல் தொடர்பு திறன்கள், தரமான உற்பத்தி செய்யும் திறன்கள்). இவைகளை விட,  இன்று எதிர்பார்ப்பது ஒரு நம்பிக்கையான, நம்பகமான மற்றும் நேர்மையான குணமுடைய ஒரு நபரைத் தான். யோசேப்பு,  தான் வேலை செய்த எல்லா இடங்களிலும் எஜமானுக்கு இப்படிப்பட்ட நபராகத் தான் இருந்தான். தேவன் மேல் முழு நம்பிக்கையும், நல்ல குணங்களுமே வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது. யோசேப்பின் வெற்றியால் யாக்கோபின் குடும்பமும்  பஞ்சத்திலிருந்து காக்கப்பட்டு, இஸ்ரவேல் என்ற சிறந்த