2018 Promise Word

..."நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்". செப்பனியா 3:20

Holy Mountain AG Church

Today's Verse 14-12-2018

"இவர் நம்மை இரட்சிப்பார்;இவரே கர்த்தர்" -ஏசா: 25:9

உயிருள்ள சாட்சிகள்

more
இந்த மாத வாக்குத்தத்தம்

"கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார். ".சங் . 138:8

more
இந்த மாத வாக்குத்தத்த செய்தி

செய்து முடிக்கும் தேவன்

அன்புக்குரிய சகோதர ,சகோதரிகளே  யாவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் .இந்த ஆண்டின் இறுதி மாதத்தை கான தேவன் கிருபை பாராட்டியுள்ளார் . தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.அடுத்த ஆண்டிற்க்காக திட்டமிடுங்கள்.

விசேஷமாக இந்த டிசம்பர் மாதம் சில காரியங்களை முடிவுக்கு கொண்டுவருவார்.நாம் ஆராதிக்கிற தேவன் ஆரம்பிக்கிறவர் மட்டுமல்ல முடிக்கிற தேவன்.

1.துதிக்க வேண்டும் :- சங்.138:1

தாவீதுடைய வாழ்வில் தேவனே நல்ல காரியங்களை துவக்கினார்.துவக்கின தேவனே அவையெல்லாவற்றையும் நல்ல முடிவுக்கும் கொண்டு வந்தார் .எதையும் தேவன் அரைகுறையாக விடவில்லை. தேவன் தெரிந்து கொண்ட இஸ்ரவேலின் முதல் ராஜா சவுலின் வாழ்வில் நல்ல முடிவு இல்லாமல் போனது.உங்கள் வாழ்விலும் இந்த ஆண்டிற்குள் தேவன் முடிக்க வேண்டியவைகளை நன்மையாக செய்து முடிக்க வேண்டுமானால் தாவீதைப் போல எப்பொழுதும் கர்த்தரை துதித்துக் கொண்டே இருங்கள் .முறுமுறுக்காதிருங்கள் .தேவையில்லாத வீண் வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காதிருங்கள் .

2.கூப்பிடுங்கள்: சங்.138:3

ஜெபம் ஒரு தேவபிள்ளை வாழ்வில் மிகவும் முக்கியமானது .சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டுமல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணி ஜெபிக்க  வேண்டும். தாவீது 1 நாளைக்கு 7 முறை ஜெபிய்க்க பழக்க உடையவராக இருந்தான். எந்த சூழ்நிலையிலும் மனிதனை நம்பாமல் தேவனையே நோக்கி பார்க்கிற நபராக இருந்தான்.ஜெபம் ஒரு திறவுகோல் (சாவி) எப்பொழுதெல்லாம் ஜெபம் என்கிற சாவியை எடுக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்களுக்கு பதில் கிடைக்கும் .எந்த சூழ்நிலையிலும் ஜெபிப்பவர்களே உண்மையான ஜெப வீரர்கள்.ஜெபிக்க கூடாது என்று ராஜாவின் கட்டளை இருந்த போதிலும் அது தானியேலுக்கு தெரிந்த போதிலும் தான் முன் செய்து வந்த படியே தினமும் மூன்று வேளை தேவனை நோக்கி ஜெபித்தான்.கர்த்தர்  அவனுக்காக யாவையும் செய்து முடிப்பார்.

3.தாழ்மையாயிருங்கள் : சங்.138:6

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் .எதை குறித்தாவது பெருமை உங்கள் வாழ்வில் இருக்குமானால் தேவன் உங்களை வாழ்வில் செயல்பட மாட்டார்.தாவீது ஒரு போதும் தான் எங்கிருந்து உயர்த்தப்பட்டான்  என்பதை மறக்கவில்லை.சாகும் வரை தாழ்மையுள்ளவனாக இருந்தான்.இதை வாசிக்கிறவர்களே உங்கள் வாழ்விலும் ஒருபோதும் தேவன் உங்களை எந்த நிலைமையில் இருந்து உயர்த்தினார்என்பதை மறந்து விடாதிருங்கள் ஆமென்.   

more
புதுக்கவிதை

"

எனக்காக யாவையும் - தேவன்

    எப்படியும் செய்திடுவார்

ஏக்கங்களை நீக்கி - எனக்கு

    ஏணியாக இருந்திடுவார்

எதிரிகளை அளித்து - நல்ல

    எதிர்காலம் தந்திடுவார்

ஏமாற்றங்களை மாற்றி - என்னை

    ஏறுவரிசையில் நடத்திடுவார்

எதற்கும் கலங்க மாட்டேன் - இயேசு

    என்னுடன் இருப்பதால்

"

...... ஆசிரியர்

more

special events

எச்சரிக்கை வசனம் :-  கோபக்காரனுக்கு தோழனாகாதே ; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே ..  நீதி 22:24