உயிருள்ள சாட்சிகள்

02-05-2018
5.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-

07.04.18 அன்று உபவாச ஜெபத்தில் கலந்து கொண்டேன். எனக்குள் தேவன் அக்கினி அபிஷேகத்தைக் கொடுத்தார் .அந்த நேரத்தில் எனது சரீரத்தில் ஒரு புதிய பெலனையும் நான் பெற்றுக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.தேவன் நல்ல சுகத்தைக் கொடுத்தார் .தேவனுக்கு நன்றி!

-Bro.E.துரை புதுக்கோட்டை ..
02-05-2018
4. விடுதலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-

எனது தம்பி ஒரு இடத்தில் ரொம்ப கஷ்டத்தின் மத்தியில் இருந்தான். தம்பிக்கு விடுதலை கொடுத்தால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு தம்பிக்கு விடுதலை கொடுத்தார்.எனது தம்பியை தேவன் வெட்கப்படுத்தாதபடிக்கு பாதுகாத்தார் .தேவனுக்கு நன்றி !

-Sis.லாரன்ஸ் மேரி தருவைக்குளம் .
02-05-2018
3.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-

நான் வேலையில்லாமல் இருந்தேன் ."பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை " என்ற வாக்குத்தத்த வசனத்தை வைத்து ஜெபித்தேன்.மேலும் பாஸ்டர் அவர்களும் எனக்காக ஜெபித்தர்கள் .அந்த வாரத்திலே தேவன் எனக்கு நல்ல ஒரு வேலையைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி .ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி!

-Bro.ஷீலன் ஆசிரியர் தெரு ..
02-05-2018
2.தேவனுக்கே மகிமை :-

என் மகளுக்கு 2 மாதங்களாக ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. 20 நாட்கள் உபவாச நாட்களில் பொருத்தனை பண்ணி ஜெபித்தேன் . செய்தி மலரில் சாட்சி எழுத்துவதாகவும் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்க தேவன் உதவி செய்தார் . தேவனுக்கு நன்றி !

-Sis.எஸ்தர் M.K காடு .
02-05-2018
1. அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-

தேவன் என் தங்கைக்கு ஒரு வயல் வாங்க உதவி செய்தார் . இந்த வருடம் விதைக்க வேண்டும் என்று சொல்லி நானும் என் தங்கையும் ஜெபித்தோம். பயிர் வளர்ந்து கதிர் வந்த போது வயலிலும், குளத்திலும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. நான் நம்பிக்கையோடு தேவனிடத்தில் ஜெபம் பண்ணினேன் . தேவன் ஜெபத்தைக் கேட்டு மழையை பெய்யப் பண்ணி பயிரை விளையச் செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றி !.

-Sis.ஜேஸ்மின் முடிவை .
06-04-2018
சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-

நான் சனிக்கிழமை அன்று உபவாச ஜெபத்திற்கு வந்திருந்தேன்.அப்பொழுது எனது சரீரத்தில் இளப்பு வியாதி அடிக்கடி வருகிறதினால் உபவாச ஜெபத்தில் சொல்லி ஜெபித்தேன்.தேவன் சுகத்தைக் கொடுத்தார்.எனக்காக ஜெபித்த பாஸ்டர் பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி!

-Bro.சாமுவேல் சிறுவளஞ்சி .
06-04-2018
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-

எனக்கு வாயிற்றில் கட்டி இருந்தது .ஆப்ரேசன் பண்ணி எடுக்க தேவன் உதவி செய்தார். மேலும் இடத்திற்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தோம்.அதிலும் தேவன் அற்புதமாக எந்த பிரச்சனைக்கும் இல்லாதபடி இடம் கிடைக்க உதவி செய்தார். தேவனுக்கு நன்றி

-Sis.எலிசபெத் ராஜீவ் நகர் ..
06-04-2018
6.அற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-

எனது தங்கைக்கு இரத்த குழாயில் அடைப்பு இருந்தது .பாஸ்டரிடம் சொல்லி ஜெபித்தோம் .தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.மேலும் எங்கள் ரேஷன் கார்டு கிடைக்கும்படி ஜெபித்தோம் .அதுவும் கிடைக்க தேவன் உதவி செய்தார் .குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது .ஜெப எண்ணெய் போட்டு ஜெபித்தோம்.தேவன் அற்புதமாக சுகம் கொடுத்தார்.மேலும் நாங்கள் இடம் வாங்க வேண்டும் என்று ஜெபித்தோம்.பயங்கர பிரச்சனையாக இருந்தது.கர்த்தருக்குச் சித்தமானால் அந்த இடம் கிடைக்க வேண்டும் .இல்லையென்றால் வேண்டாம் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்கே அந்த இடத்தை வாங்க உதவி செய்தார் .தேவனுக்கு நன்றி !

-Sis.S.மாரிக்கனி நாச்சியார்புரம் ..
06-04-2018
சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

என் அம்மாவிற்கு கண்களில் உள்ள நரம்பில் வைரஸ் தொற்று நோய் இருந்ததினால் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் .ஒவ்வொரு நிமிடமும் வலியினால் கஷ்டபடுவார்கள்.பொருத்தனை பண்ணி ஜெபித்தோம்.பாஸ்டர் அவர்களும் ஜெபித்தார்கள்.தேவன் ஜெபத்தைக் கேட்டு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி!

-Sis.E.ராஜேஸ்வரி தூத்துக்குடி ..
06-04-2018
தேவனுக்கே மகிமை :-

எனது நர்ஸிங் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பு முடிக்காமல் இருந்தது .நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் பரீட்ச்சை எழுதி பாஸ் பண்ண தேவன் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி .மேலும் ,நான் கன்சீவ் ஆக இருக்கும் போது 9 வது மாதத்தில் நீர் சத்து குறைவாக இருப்பதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.எல்லோரும் ஜெபம் பண்ணினோம் .தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறக்க கிருபை பாராட்டினார்.தேவனுக்கு கோடான கோடி நன்றி!

-Sis.யோவன்னாள் முடிவை .
06-04-2018
அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-

நான் இருதய நோய்னால் ரொம்ப கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். பாஸ்டர் ஆஸ்பத்திரியில் வந்து எனக்காக ஜெபித்தார்கள். சபை மக்களும் எனக்காக ஜெபித்தார்கள். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த எனக்கு தேவன் அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி.ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா மற்றும் சபை மக்கள் யாவருக்கும் நன்றி!

-Sis.ஜெயா அழகாபுரி ..
06-04-2018
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ::-

நாங்கள் புதுக்கோட்டையில் கடை வைத்திருந்தோம் .திடீரென்று கடையை காலிபண்ணசொல்லிவிட்டார்கள். பின்பு நான் பாஸ்டர் , பாஸ்டர் அம்மா இருவரிடமும் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு வீட்டு பக்கத்திலேயே கடை வைக்க கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. ஜெபித்த பாஸ்டர்,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி

-Sis.லெட்சுமி புதுக்கோட்டை .
06-04-2018
தேவனுக்கே மகிமை ::-

எனது மகளின் திருமணத்திற்காக கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினேன். எனது விண்ணப்பத்தைக் கேட்டு மகளுக்கு நல்ல ஊழியக்காரரை துணையாக கொண்டு வந்தார். எனக்காக யாவையும் செய்து முடித்த கர்த்தருக்குக் கோடான கோடி நன்றி .எனது மகளின் திருமணத்திற்காக ஜெபித்த பாஸ்டர், பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி!

-Sis.ரதி சந்தோச நகர் .
01-03-2018
5.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ::-

எனக்கு கடந்த சில நாட்களாக வலது காதில் வலியும் ,ரொம்ப இரைச்சலுமாக இருந்தது. சனிக்கிழமை அன்று உபவாசக் கூட்டத்தில் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் ஜெபத்தைக் கேட்டு சுகத்தைக் கொடுத்தார். மேலும் எனக்கு கண் Operation -க்காக அதிகாலை ஜெபத்தில் கலந்து கொண்டு பாஸ்டரிடம் ஜெபித்தேன்.கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண் நல்ல படியாக முடிய கர்த்தர் உதவி செய்தார்.தேவனுக்கு நன்றி !பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி.

-Sis.ஜெயபாலி ஆசிரியர் தெரு ..
01-03-2018
4.அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்: :-

தேவன் தமது மிகுந்த கிருபையினால் என்னை இரட்சித்து என் போக்கையும் ,என் வரத்தையும் ஒரு சேதமும் வராத படி பாதுகாத்தார். இப்பொழுதும் எனக்கு மருந்தாளர் (Pharmacist)வேலையை தந்துள்ளார்.தேவனுக்கே நன்றி!

-sis.ஆழ்வார் ஆறுமுக நகர் .
01-03-2018
3.தேவனுக்கே மகிமை ::-

நான் கடந்த ஜனவரி மாதம் 11.01.18 அன்று கண்டெய்னர் லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விட்டேன். நான் விழுந்த வேகத்தில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்து இருக்கணும் ,ஆனால் தேவன் என்னைப் பாதுகாத்து தப்புவித்தார். காலில் லேசான அடிபட்டு கட்டு போட்டிருந்தேன். பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். தேவன் எனக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

-Sis.P.சாந்தா பேய்க்குளம்..
01-03-2018
2.சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ::-

கடந்த ஜூலை மாதத்தில் Piles வியாதியினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த வியாதி சுகமானால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். மறுநாளிலே தேவன் பரிபூரண விடுதலையைக் கொடுத்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.

-Bro. A.S.Jசீலன் ஆசிரியர் தெரு..
01-03-2018
1. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ::-

எனது மகனுடைய Birth Certificate தொலைந்து விட்டது. நான் தேவனிடத்தில் prayer பண்ணினேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு மகனுடைய Birth Certificate கிடைக்க உதவி செய்தார் .இயேசப்பாவுக்கு நன்றி!

-Sis.மரியாள் ..
22-02-2018
அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-

கர்த்தருடைய கிருபையினால் எனது மனைவி கனகாவிற்கு 09.12.17 அன்று Normal Delivery-ல் ஆண் குழந்தை பிறக்க கிருபை செய்தார் .தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.

-.
22-02-2018
சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-

எனது மகனுக்கு உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டான். Sunday Service-க்கு வரும்போது பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக எனது மகனுக்கு சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு நன்றி! Prayerபண்ணின பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி!

-Sis.எஸ்தர் லிலிஸ் சோரீஸ்பூரம் .
22-02-2018
தேவனுக்கே மகிமை :-:-

கடந்த 3 மாதங்களாக எனக்கு கண் வலி இருந்து கொண்டே இருந்தது .Hospital-ல் Treatment எடுத்தும் சரியாகவில்லை. அதிகாலை ஜெபத்திற்கு வந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபம் பண்ணின போது தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். தேவனுக்கு ஸ்தோத்திரம் . ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி!

-Mrs.R ரெஜினா ராஜா புதுக்கோட்டை..
22-02-2018
விபத்திலிருந்து பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் :-:-

எங்கள் School Van மிகப் பெரிய ஆபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இயேசுவின் பெயரை சொல்லி Praysr பண்ணின போது அந்த பெரிய ஆபத்திலிருந்து தேவன் பாதுகாத்தார். மேலும் எனது அப்பாவுக்கு Operation நடந்தது. அதிலும் உயிரைக் கொடுத்தார் . தேவனுக்கு நன்றி!

-Sis.பேராட்சி செல்வி SDR School..
22-02-2018
அற்புதங்கள் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் :-:-

எனது மூத்த மருமகளுக்கு 27.12.2013 -ல் திருமணம் நடைபெற்றது .15.01.2018 – ல் Nor,al Delivery -யில் அழகான ஆண் குழந்தையை தேவன் கொடுத்தார். மேலும் இளைய மருமகளுக்கு Piles வியாதியினால் கஷ்டப்பட்ட போது பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தோம். தேவன் அற்புதமாக விடுதலை கொடுத்தார். மருமகனுக்கும் ஏற்பட்ட Accident-ல் கால் எலும்பு முறிவில் தேவன் சுகத்தைக் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்.ஜெபித்த பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி!

-Sis.ஜெபா சார்லஸ் K.Kகாடு..
22-02-2018
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் :-:-

நான் கால் வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன். முற்றிலும் சரியாகிவிட்டால் செய்தி மலரில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தேன்.தேவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமாக சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்கு நன்றி!

-Sis.கலையரசி சமத்துவபுரம் ..
23-02-2018
சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.:-

எனது தம்பி மகன் டெங்கு காய்ச்சலினால் ரொம்ப கஷ்டப்பட்டான். டாக்டரும் கைவிடப்பட்ட நிலையில் இனி நீங்கள் ஜெபம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இரவு 9:30 மணிக்கு பாஸ்டருக்கு பண்ணி ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். பாஸ்டர் அவர்களும் ஜெபித்துவிட்டு இயேசப்பாசுகம் தருவார் என்று சொல்லிவிட்டார்கள். அன்றைக்கே எனது தம்பி மகனுக்கு புது உயிர்கொடுத்து சுகத்தைக் கொடுத்தார்.தேவனுக்குநன்றி! ஜெபித்தபாஸ்டர்அவர்களுக்கும்நன்றி .Sis.லாரன்ஸ்மேரி .தருவைகுளம் .

-Sis.லாரன்ஸ்மேரி, தருவைகுளம்.