2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

ஊழியங்கள்

சிறுவர் ஊழியம்

கர்த்தருடைய பெரிதான கிருபையால் சபையின் சிறுவர் ஊழியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஞாயிறு தோறும் 3 சிறுவர் ஆராதனைகள் நடைபெறுகிறது. அது மட்டுமல்ல 33 இடங்களில் சிறுவர் கூட்டங்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு ஒருமுறை V.B.S. (விடுமுறை வேதாகமப் பள்ளி) சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அநேக சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று வருகின்றனர்.

பரிசுத்த பர்வதம் A.G. சபையின் சிறுவர் ஊழியப் பொறுப்பாளர்கள்
பொறுப்பு: Bro.ராஜன்
எண் பெயர் நடைபெறும் இடம் நாள் நேரம் (மாலை)
1 Sis.எஸ்தர்ஜோதி புதுக்கோட்டை 1st    
2 Sis.சுதா புதுக்கோட்டை G.H    
3 Sis.குளோரி புதுக்கோட்டைநடுத்தெரு    
4 Sis.கிருபா புதுக்கோட்டை (கோ. ப .கா )    
5 sis.சுதா புதுக்கோட்டை (பி .பி. கா)    
6 Sis.சிந்து யாதவர்தெரு 1    
7 Bro.சாமுவேல் யாதவர்தெரு 2    
8 Sis.ஜெயமேரி ஆசிரியர்தெரு 1    
9 Sis.ரோஸ்லின் ஆசிரியர்தெரு 2    
10 sis.அருள்வாசினி ஆசிரியர்தெரு 3    
11 sis.பிரசன்னா புதுக்கோட்டைகடைசி    
12 Bro.கார்த்திக் அம்மன்கோவில்தெரு    
13 sis.இவாஞ்சலின்மேரி செல்வம்சிட்டி1    
14 sis.பாக்கியசீலி அன்புநகர்    
15 sis.வனஜா இந்திராநகர்தெற்கு    
16 sis.ஜாஸ்மின் இந்திராநகர்கடைசி    
17 sis.சுகன்யாகுமாரி பொன்ராஜ்நகர்    
18 Bro.பாலமுருகன் மாதவன்நகர்    
19 sis.மீனா ராம்சன்ஸ்நகர்    
20 sis.சுகன்யா யூனியன்ஆபிஸ்    
21 sis.ஞானசில்வியா யூனியன்ஆபீஸ்எதிர்புறம்    
22 sis.வினிதா N.Kகாடு    
23 sis.அமுதா N.Kகாடு,(நியூகாலனி)    
24 sis.தேன்மொழி சந்தோஷநகர்2    
26 sis.ராஜசெல்வி ஆறுமுகநகர்    
27 Bro.ராஜேஸ் ஐயப்பநகர்1    
28 sis.வேணி K.Kகாடு    
29 sis.சத்யா ராஜீவ்நகர் 1    
30 sis.முத்துமாலையம்மாள் ராஜீவ்நகர் 2    
31 Bro.ஜெபின் அய்யனார்காலனி (கீழ்ப்பகுதி)    
32 sis.எஸ்தர் கீழத்தட்டப்பாறை 1    
33 sis.திவ்யா கீழத்தட்டப்பாறை 2    
34 sis.எஸ்தர் ஜோதிநகர்    
35 sis.விண்ணரசி மறவன்மடம் (இந்தராநகர்)    
36 sis.புனிதா மறவன்மடம்    
37 sis.செலின் திரவியபுரம்    
38 sis.வைஷ்ணவி சிலுக்கன்பட்டி    
39 sis.அமுதா ஸ்ரீனிநகர்    
40 sis.ரூத் நாச்சியார்புரம்    
41 sis.பியூலாஆக்னஸ் கோரம்பள்ளம்    
42 sis.லீலி மாதவன்நகர்(மேற்கு,கிழக்கு)    
43 sis.பிலோமீனா மாதவன்நகர்-2    
44 sis.ஆஷாபிரியா சிவசக்திநகர்    
45 sis.சாராள் சோரீஸ்புரம்    
46 sis.ரேவதி சிலுவைபுரம்    
47 sis.ரோஜா கூட்டாம்புளி(பொன்நகர்)    
48 sis.ரத்தினசொருபா கூட்டாம்புளி -1    
49 sis.தனம் கூட்டாம்புளி -2    
50 sis.ஜீவிதா கூட்டாம்புளி -3    
51 sis.தெபோராள் பேய்க்குளம்    
52 sis.பூர்ணிமா திருமலையாபுரம்    
53 sis.கோயில்செல்வி சிவஞானபுரம்    
54 Bro.அலெக்ஸ் சேர்வைக்காரன்மடம் -1    
55 sis.ஆனந்தி சேர்வைக்காரன்மடம் -2    
56 sis.மெர்சி பிரம்மையாபுரம்    
57 sis.அமலா செபத்தையாபுரம்    
58 sis.அன்னஜெயம் புளியநகர்    
59 Bro.தேவதாஸ் காமராஜநகர்    
60 sis.அன்பு பாண்டியாபுரம் 1    
61 sis.பார்பராள் பாண்டியாபுரம் 2    
62 Bro.சாலமோன் மங்களகிரி    
63 sis.மரியாள் ஆண்டாள்நகர்    
64 Bro.பெனட் பேரூரணி (ஊ.கா)    
65 sis.ஜெயா பேரூரணி    
66 sis.கல்பனா சமத்துவபுரம்    
67 Bro.உலகநாதன் புதூர்    
68 sis.பிரிஸ்கில்லாள் தளவாய்புரம்    
69 sis.லீலாவதி திம்மராஜபுரம்    
70 sis.அனுராதா திம்மராஜபுரம்காலனி    
71 Bro.பெஞ்சமின் வாகைக்குளம்    
72 sis.ஜெனிபர் முடிவைகிழக்கு    
73 sis.ஜோன்ஸ்மேரி முடிவைமேற்கு    
74 sis.ராகேல் முடிவை 1    
75 sis.ராகேல் முடிவை 2    
76 sis.முத்துமேரி முடிவை 3    
77 sis.கிருபா முடிவை    
78 sis.எலிசபெத் கட்டாலங்குளம்    
79 sis.ரூபனா T.B.N தெரு    
80 sis.ஹேமா யூகோநகர்    

கிராம ஊழியம்

புதுக்கோட்டையை சுற்றி 55 கிராமங்கள் உள்ளன. ஞாயிறு தோறும் மாலை 04.00 - 06.30 வரை சபையில் இருந்து ஒரு பொறுப்பாளர் தலைமையில் குழுவாக வாகனத்தில் சென்று தனிப்பட்ட முறையில் ஜனங்களை சந்தித்து இரட்சிப்புக்குள் நடத்துகின்றனர். மாதம் ஒரு கிராமம் தத்தெடுக்கப்பட்டு அந்த மாதம் முழுவதும் அங்கே பல வகையான ஊழியங்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஊழியத்தின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

பத்திரிக்கை ஊழியம்

இந்த பத்திரிக்கை ஊழியம் கடந்த 12 வருடங்களாக மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை ஊழியம் தற்போது 16 பக்கங்கள் கொண்ட "பரிசுத்த பர்வதம்" செய்தி மலராக முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது தேசத்தின் பல இடங்களுக்கும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பத்திரிக்கை ஊழியத்தின் மூலமாக அநேகர் சத்தியத்தை அறிந்து விடுதலை பெற்று வருகின்றனர்.

மிஷனெரி ஊழியம்

தற்போது 5 மிஷனெரிகள் ராஜஸ்தானிலும், 1 மிஷனெரி தமிழ்நாட்டிலும் சபையின் மூலமாக தாங்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு மிஷனெரிக்கும் மாதம் ரூ. 4000/- அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மிஷனெரிகளுக்காக சபையில் சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறது. டிஜிட்டல் போடு ஒன்று செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநில வரைபடம் மற்றும் இதர குறிப்புகள் ஜனங்கள் பார்க்கிற இடத்தில் வைக்கப்பட்டு, மிஷனெரி ஊழியத்தை குறித்த பாரம் ஜனங்களுக்குள் தூண்டி விடப்படுகிறது. வருகிற நாட்களில் இன்னும் அநேக மிஷனெரிகளை தாங்க வேண்டும் என்ற தரிசனத்துடன் சபை திட்டங்களை தீட்டி வருகிறது.

நமது சபை தாங்கும் மிஷனெரிகள். இந்த மிஷனெரிகளை உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தினாலும் தாங்க முன்வரலாம்.

T.V. ஊழியம்

மிக எளிய முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விடுதலை நேரம் T.V. ஊழியம் தற்போது 9 சேனல்களில் 13 இடங்களில் இருந்து ஒளிபரப்படுகிறது. மாதந்தோறும் ரூ. 25,000/- இந்த ஊழியத்திற்காக செலவிடப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான ஜனங்கள் இந்த விடுதலை நேரம் நிகழ்ச்சியை பார்த்து ஆசிர்வதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் E-mail அனுப்புவார்கள். சிலர் தொலைபேசி மூலமாகவும், SMS மூலமாகவும் சாட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை நேரம் T.V. நிகழ்ச்சிகள்

 1. தமிழன் T.V புதன்தோறும் மாலை 7:30
 2. Hope T.V செவ் ,வியாழன் மாலை 7:00
 3. Cross T.V ஞாயிறுதோறும் காலை 7:00
 4. God’s Power T.V தினமும் இரவு 8:30
 5. லீபனோன் T.V தினமும் இரவு 7:30
இந்த விடுதலை நேரம் T.V. நிகழ்ச்சிக்காக ஜெபியுங்கள். உங்கள் பொருளாதாரத்தினால் தாங்குங்கள்.

மருத்துவமனை ஊழியம்

மாதம் ஒருமுறை சபையிலிருந்து ஒரு குழுவாக வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபம் செய்து வருகின்றனர், மற்றும் புதிய ஏற்பாடுகள் அவர்களுக்கு கொடுத்து வாசிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.

இந்த ஊழியத்தின் மூலமாக அநேகர் சுகம் பெறுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து சபை ஐக்கியத்திலும் பங்கு பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் ஊழியம்

மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக இந்த ஊழியம் தேவை என்பதை உணர்ந்து சில ஆண்டுகளாக இந்த ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இதற்கு பொறுப்பாக Bro. குமார் B.Sc., MCA அவர்கள் உள்ளார். 5 கல்லூரிகளில், 1 பள்ளி கூடத்தில் தற்போது இந்த ஊழியங்கள் நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் கூடி ஜெபித்தல், மற்ற மாணவர்களுக்கு சுவிசேஷம் அருவித்தல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பரீட்சை நாட்களில் அவர்களுக்காக சிறப்பு பிராத்தனை ஏறெடுக்கப்படுகிறது.

பின் தொடர் ஊழியம்

சபையின் மூலமாக நடைபெறுகிற எந்த ஊழியமாக இருந்தாலும், அதன் மூலமாக இரட்சிக்கப்படுகிறவர்கள் தொடர்ந்து சந்திக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்டு சபை ஐக்கியத்தில் இணைக்கப்படுவதற்கு இந்த ஊழியம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது.

 1. புதிதாக ஆராதனைக்கு வருபவர்கள்
 2. தொலைபேசி, E-mail, கடிதம் மூலமாக தொடர்பு கொள்பவர்கள்
 3. சபையில் நடைபெறுகிற சிறப்பு கூட்டங்கள் மூலம் தொடப்படுகிறவர்கள்
 4. பராமரிப்புக் குழுக்கள் மூலமாக சந்திக்கப்படுகிறவர்கள்

இவர்கள் எல்லாருடைய முகவரிகள் பெறப்பட்டு, முதலாவது இவர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. பின்னர் Division தலைவரோ அல்லது உதவி ஊழியர்களோ அல்லது பராமரிப்பு குழு தலைவர்களோ இவர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதன் மூலமாக அநேகர் சபையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனை முடிந்த பின்பும் புதிதாக வருபவர்களுக்கு எண்ணை பூசி ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.

நேசக்கரங்கள் ஊழியம்

சபையிலும் சபைக்கு வெளியிலும் வறுமையில் இருப்பவர்கள், பற்றாக்குறையில் வருபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பல விதங்களில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

 1. வேலை செய்வதற்கு உபகரணங்கள் வாங்கி கொடுத்தல்.
 2. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு Fees மற்றும் Uniform எடுத்து கொடுத்தல்.
 3. சிலருக்கு வீட்டு வாடகை கொடுத்தல்.
 4. மருத்துவ உதவி செய்தல்
 5. விதவைத் தொகை கொடுத்தல்
 6. எளிய முறையில் திருமணம் நடத்தில் வைத்தல்.
 7. உடைந்த வீடுகளை பழுது பார்த்து கொடுத்தல்.

ஜெப நடை ஊழியம்

வாரம் ஒரு முறை பராமரிப்புக் குழுக்கள் நடைபெறுகிற அந்தந்த இடங்களில் அந்தந்த பராமரிப்புக் குழு நடத்துகிற தலைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலமாக அந்த பகுதியில் ஜெபித்து கொண்டே நடந்து அந்த பகுதியை சுற்றி வருதல்.
இதன் மூலமாக அந்த பகுதியில் கிரியை செய்கிற அந்தகார வல்லமைகள் முறியடிக்கபடுகிறது.

பராமரிப்புக் குழுக்கள்

புதுகோட்டையும் அதை சுற்றியுள்ள 55 கிராமங்களை மையமாக வைத்து இந்த ஊழியம் நடைபெறுகிறது. 80 இடங்களில் தற்போது பராமரிப்புக் குழுக்கள் நடைபெற்று வருகிறது. 8 Division தலைவர்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. வாரத்தின் இடைப்பட்ட நாள் ஒன்றில் மாலை நேரத்தில் ஒரு வீட்டில் 45 நிமிடம் நடைபெறுகிறது. விசுவாசிகள் கூடுவது மட்டுமல்லாமல் வாரம்தோறும் புதிய நபர்கள் இணைவதற்கும் இது வழி வகுக்கிறது. இதன்மூலம் சபை வளர்ந்து வருகிறது.

நமது சபையின் மூலம் நடைபெறுகிற பராமரிப்புக் குழுக்கள்

ஆலோசனை ஊழியம்

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 10.00 - 01.00 வரை நானும் எனது மனைவியும் உபவாசத்துடன் வருகிறவர்களுக்கு ஜெபிப்பது மட்டுமல்லாமல் நேரம் எடுத்து அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். இப்படி செய்வதால் அநேகருடைய பிரச்சனைகள் மாறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அநேக அற்புதங்களையும் தேவன் செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 நபர்களாவது வந்து ஆலோசனை பெற்று ஜெபித்து செல்கின்றனர்.
நீங்கள் போதகரை நேரில் சந்தித்து ஜெபிக்க வேண்டுமா?
பல விதமான வியாதியிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெறவும், உங்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 09:30 முதல் மதியம் 01:00 மணி வரை Rev.J.சாமுவேல் ஜெபராஜ் அவர்களிடம் சபைக்கு வந்து ஜெபித்து செல்லுங்கள். உங்களுக்காக போதகர் அவர்கள் உபவாசத்துடன் ஜெபிக்க காத்திருக்கிறார்கள். போன்: 0461 - 6537314