2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

பெண்கள் பகுதி...

இயேசுவின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் பெண்களாகிய உங்களுக்கு என் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! சுகமாயிருக்கிறீர்களா? 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இயேசு இந்த பூமியில் பிறந்த நற்செய்தியை கொண்டாடும், அறிவிக்கிற ஒரு மகிழ்ச்சியான மாதம். அது மாத்திரமல்ல, நமக்கு முன் வர இருக்கிற ஒரு புதிய ஆண்டுக்காக ஜெபித்து ஆயத்தப்படுகிறமாதம். சகல காரியங்களிலும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக. இயேசுவின் பிறப்பைக் குறித்து பேசுகின்ற நாம், இயேசு இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்த காலங்களில் அவருடைய வாழ்வில் இருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொள்ள முடியும். முக்கியமான 3 காரியங்கள்.

1.பிதாவின் சித்தம்:-

இயேசு பூமியில் பிறந்த நோக்கமே பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே. யோவான் 3:17 பிதா, இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பின நோக்கம், உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி, தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். எல்லாமனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடைவதும் பிதாசித்தம் கொண்டுள்ளார். இந்த நோக்கத்தை இயேசு நிறைவேற்றினார். இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. இயேசு வேவழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். பெண்களே! இயேசு, பிதாவின் சித்தத்தைக் நிறைவேற்றினது போல, நீங்களும் உங்களை அந்த காரித்தினின்றுதம் முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய சித்தத்தை நிறை வேற்றுங்கள்.

2.நன்மை செய்தார்:அப் .10:38:-

நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினால் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்த படியினாலே அவர் நம்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்டயாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். இயேசுவைப் போல பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் நிரப்பப்பட்ட பெண்களே! நன்மை செய்யும் படி எழும்புங்கள் தூசியை உதறிவிட்டு எழும்புங்கள். கட்டுண்ட ஜனங்களை கட்டவிழ்க்க, சிறைப்பட்ட ஜனங்களை விடுதலையாக்கஇருதயம் நொறுங் குண்டவர்களுக்கு காயங்கட்ட, சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க, துயரப்பட்ட ஜனங்களுக்கு ஆறுதலாக இருக்கும்படி எழும்புங்கள். இப்படிப்பட்ட நன்மைகள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட பெண்களாகிய உங்கள் வாழ்விலும் இருந்து வெளிப்படுவதாக. இயேசு நன்மை செய்தார். நீங்களும் கட்டாயம் நன்மை செய்யுங்கள்.

3.தாழ்த்தினார்:பிலி 2:6-8:-

இயேசு தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க்காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மை தாமே தாழ்த்தினார். பெண்களே! பெருமை பாராட்ட நம்மிடத்தில் என்ன இருக்கிறது. இயேசுவே தன்னைத் தாழ்த்தினார் என்றால், நாம் எம்மாத்திரம்மனத்தாழ்மையே அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் உன்னிடத்தில் எதிர்பார்க்கிறார். தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். இயேசுவை தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார். தாழ்த்து உன்னையும் உயர்த்துவார்.

பெண்கள் சிறப்பு ஆராதனை:

செவ்வாய் தோறும் காலை 10:00 -12:30