புதுக்கவிதை

28-02-2018 பரலோக  ராஜாவாம்

பாசமுள்ள  தகப்பனாம்

பண்புள்ள  தலைவனாம்

பரிந்து  பேசும்  நேசராம்

பாதுகாக்கும்  வீரனாம்

பரமேறிச்  சென்றவாரம்

பரிசுத்த  ஆவி  தந்தவராம்

பலவீனம்  தீர்ப்பவராம்

பரிகாரியும்  அவராம்

பரிதபிக்கும்  ஆயனாம்

படியளக்கும்  எஜமானாம்

பலியாகமாண்டாராம்

பாவங்களை  தீர்த்தாராம் -உன்

பக்கத்தில்  இருபவராம்

பரத்தில்  உன்னை  சேர்ப்பாராம்
23-02-2018

நன்மைகளின்நாயகனே

               நம்பிக்கையின்தெய்வமே

நசரேயனாகபிறந்தவரே

       நங்கூரமாய்இருப்பவரே

நானிலம்போற்றும்

       நாயகனும்நீரே

நாற்புறம்சூழ நின்று

       நாள்தோறும்காப்பவரே

நிலையானவாழ்வு கொடுத்து

       நிம்மதியும்தந்து - தலை

நிமிரசெய்பவரே - இயேசுவே

       நின்நாமம்வாழ்க....

05-02-2018

அடுத்த நிலைமைக்கு உன்னை 

         அற்புதமாக உயர்த்திடுவார் 

அற்புதங்கள் செய்து - உன்னை 

       அரியணையில் ஏற்றிடுவார் 

அலைச்சல்களை மாற்றி -உன்  

          அங்கலாய்ப்பை நீக்கிடுவார் 

யோசேப்பின் தேவன் -உன் 

       யோசனைகளை நிறைவேற்றுவார.

தாவீதின் தேவன் -உன் 

              தாகத்தைக் தீர்த்திடுவார் 

பேதுருவின் தேவன் -உன் 

             போக்கையே மாற்றிடுவார்.