2017 ஆசீர்வாதத்தின் ஆண்டு உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன். ஆதி 12:2 பரிசுத்த பர்வதம் AG சபை

இந்த மாத வாக்குத்தத்தம்

கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

லூக் 2:11

மேலும் படிக்க..

உயிருள்ள சாட்சிகள்

 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  நமது Church -ல் Van வாங்குவதற்க்காக எங்கள்கைகளில் கிடைத்த 20 ரூபாய் அனைத்தையும்.

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கே மகிமை:-

  எனது மகள்கள் 2 பேரும் காய்ச்சலினால் கஷ்டப்பட்டார்கள். 2 பேருக்கும் பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்த

  மேலும் படிக்க..
 • அற்புதம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  என்னுடைய B.Th Certificates வாங்க முடியாமல் இருந்தேன். ”கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்”

  மேலும் படிக்க..
 • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்:-

  கடந்த நாட்களில் 6 மாதங்களாக எனக்கு கால்வலி இருந்தது. பாஸ்டர் அவர்களிடம் சொல்லி ஜெபித்த போது தேவன்

  மேலும் படிக்க..
 • சுகம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்:-

  எனக்கு கால்வலி, முதுகுவலி அதிகமாக இருந்தது. மேலும் எனது பேரனுக்கும் இருந்தது. தேவனிடத்தில் பண்ணினோம்.

  மேலும் படிக்க..
 • தேவனுக்கே மகிமை:-

  எனது காலில் Sugar நோயினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது கால்விரல் எடுக்கவேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.

  மேலும் படிக்க..

வாக்குத்தத்த செய்தி

இயேசு யார்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டின் இறுதியில் இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு முழுவதும் தேவன் செய்த நன்மைகளுக்காக நன்றி சொல்லுங்கள். புதிய ஆண்டிற்குள் செல்வதற்கு முன்பு சில நாட்க்கள் உபவாசித்து புதிய தீர்மானங்களை எடுங்கள். யார் இந்த இயேசு?

1.கர்த்தர் :- லூக்.2:11

இயேசுவை வேதம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. இயேசு திருத்துவத்தில் ஒருவர் பிதாவுக்கு சமமானவர். இயேசு இந்த உலகில் மனிதனாக பிறப்பதற்கு முன்பே இருக்கிறார். கர்த்தர்த்துவம் அவர்தோளின் மேல் இருக்கும் என ஏசாயாதீர்க்கதரிசி கூறியிருக்கிறார். ஆகவே இயேசு இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் 100% கர்த்தராகவும் 100% மனிதனாகவும் இருந்தார். ஆனால் உயிரிழந்த இயேசு தற்போது அவர் மனிதன் அல்ல. சகல அதிகாரம் உடையவராக இருக்கிறார். மத் 2:18.

2.கிறிஸ்து: லூக் 2:11

கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என அர்த்தம். ஏன் எதற்க்காக அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார். லூக்.4:17-20 தரித்திரருக்கு சுவிஷேசம் பிரசங்கிக்கும்படி, இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்கும் படி, சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை கொடுக்கும்படி, குருடருக்கு பார்வையையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாகும் படியாகவும் அபிஷேகம் பண்ணப்பட்டார். இதை வாசிக்கிறவர்களே இயேசு உங்கள் வாழ்விலும் விடுதலையை கொடுக்க முடியும்.

3.இரட்சகர் :லூக் 2:11

இரட்சகர் என்றால் விடுதலை கொடுக்கிறவர். நியாயாதிபதியின் புஸ்தகத்தில் இந்த வார்த்தையை அதிகமாக வாசிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை சுற்றியுள்ள மற்ற ஜனங்களால் நெருக்கப்படும் போது இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை நோக்கி முறையிடுவார்கள். தேவன் அவர்களை விடுவிக்கயாராவது ஒரு இரட்சகரை எழுப்புவார். அந்த இரட்சகன் அவர்களுக்கு உதவி செய்து அவன் உயிரோடு இருக்குமளவும் அந்த ஜனங்களுக்கு பாதுகாப்பாக இருப்பான். ஆனால் இயேசு தேவனால் அறியப்பட்ட உலக இரட்சகர். இன்னும் அவர் இரட்சிக்கிறவராக, விடுவிக்கிறவராக இருக்கிறார். இயேசுவையே நோக்கிகூப்பிடுங்கள். அவர் உங்களை இரட்சப்பார்.