கடந்த 16.09.2020 புதன் கிழமை இரவு கடும் தலைவையினால் கஷ்டப்பட்டேன். ஆஸ்பத்திரியல் காண்பித்தும் சரியாகவில்லை .பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். பின் ஸ்கேன் எடுத்து பார்க்க சொன்னார்கள். ஸ்கேன் பண்ணி பார்த்த போது நார்மல் என வந்தது. பின்பு பாஸ்டர் ஐயாவிடம் எண்ணெய்யை ஜெபம் செய்து விட்டு போட்டேன். கர்த்தர் பரிபூரண சுகம் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றி! ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி!
"உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் ." - மீகா 7:15
நீ அதிசயங்களைக் காண்பாய்
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு முழுவதும் தேவன்
நடத்தி வந்த வழிகளை நினைத்து
தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த
ஆண்டு தேவன் உங்களை அதிசயமாக
நடத்துவார்.எகிப்தில் இருந்து இஸ்ரவேலர் எப்படி
அதிசயங்களை கண்டு கானான் வந்து
சேர்ந்தார்களா அதைப் போலவே அதிசயமான
வழியிலே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன்
நடத்துவார்.
இஸ்ரவேலர்கள்
என்னென்ன அதிசயங்களை கண்டார்கள் :
1. வித்தியாசப்படுத்தும்
தேவன் :-
எகிப்தில்
பார்வோன் இஸ்ரவேலர்களை விட பலத்த போது
தேவன் அநேக வாதைகளால் எகிப்தியரை
வாதித்தார். அந்த வாதைகளில் ஒன்றும்
இஸ்ரவேல் ஜனங்களை பாதிக்கவில்லை. இஸ்ரவேல்
அதே எகிப்து தேசத்தில் இருந்தாலும்
,இஸ்ரவேலருக்கு தேவ பாதுகாவல் இருந்தது.
இதை வாசிக்கிறவர்களே இந்தியாவில் 138 கோடி ஜனங்கள் வாழ்கிறார்கள்.
எத்தனையோ ஆபத்துக்கள் இந்திய மக்கள் சந்தித்து
வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு
ஒரு விசேஷ பாதுகாப்பு ஜனங்களுக்கு
உண்டு ,பயப்பட வேண்டாம். தேவன்
தம்முடைய ஜனங்களுக்கு கேடகமாக, அடைக்கலமாக ,புகலிடமாக இருப்பார்.
2.வழி நடத்தும் தேவன் :-
இஸ்ரவேலர்
செங்கடலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்.பின்னால் பார்வோன் சேனை நெருக்கியது .அந்த
சூழ்நிலையில் தேவன் மோசேயிடம் தன்
கையில் வைத்திருந்த கோலை நீட்ட சொல்கிறார்.
செங்கடல் இரண்டாக பிழந்தது. அத்தனை
இஸ்ரவேலரும் தங்கள் உடைமைகளுடன் பத்திரமாக்க
செங்கடலை கடந்தனர்.
ஆனால் பின் தொடர்ந்து வந்த
பார்வோனின் சேனை அதே செங்கடலில்
அழிந்து போனார்கள். இதை வாசிக்கிறவர்களே இந்த
ஆண்டு உங்களை அழிக்க பின்
தொடர்ந்து வரும் வல்லமைகள் அழிந்து
போகும் . நீங்கள் தப்பி கரை
சேர்வீர்கள். உங்களை நடத்தும் தேவன் உங்களுக்கு முன்பாக செல்வார்.
அவர் சமூகம் உங்களை பின்னாலே
பாதுகாக்கும்.
3.தேவைகளை
சந்திக்கும் தேவன்:-
இஸ்ரவேலர்கள்
சுமார் 30 லட்சம் ஜனங்களுக்கும் 40 வருடம்
தேவன் உணவு ,உடை கொடுத்தார்
.அது மட்டுமல்ல அவர்கள் கேட்ட இறைச்சியையும்
கொடுத்தார்.
விதைப்பும்
இல்லை
, அறுப்பும் இல்லை எப்படி
இது நடந்தது ! யாவருக்கும் இது ஆச்சரியமான ஒன்றுதான்.
ஆனால் தேவனுக்கு இது பெரிய விஷயமில்லை.
அன்புக்குரியர்வர்களே இந்த ஆண்டு உங்கள்
தேவைகளை ஆச்சரியமாக தேவன் சந்திப்பார். எந்த
ஒரு தேவைக்காகவும் கலங்க
வேண்டாம் .அது எவ்வளவு பெரிய
தேவைகள் இருந்தாலும் தேவனால் சந்திக்க முடியும்.
4.சொன்னதை
செ ய்யும் தேவன் :-
தேவன் சொன்ன படியே இஸ்ரவேல்
ஜனங்கள் பாலும் ,தேனும் ஓடுகிற
கானான் தேசம் வந்தடைந்தார்கள். முறுமுறுத்தவர்கள்
, பாவம் செய்தவர்கள் அழிந்து போனார்கள். ஆனால்
அடுத்த தலைமுறை அந்த வாக்குத்தத்த
கானானை சுதந்தரித்தார்கள்.
தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரானால் நிச்சயம் அதை நிறைவேற்றுவார். அவிசுவாசப்பட
வேண்டாம். தேவன் உண்மையுள்ளவர் .ஆமென்.
அடிமைத்தனஎகிப்து
அகலும்சீக்கிரத்தில்
தடுக்கும்செங்கடல்
தானாகவிலகும்
பார்வோனின்சேனை
படாதபாடுபடும்
தேனிட்டபனியாரம்
தினம்தினம்கிடைக்கும்
அதிசயம்உன்வாழ்வில்
உபவாச ஜெபம் | காலை | 10.00 AM - 12.00 PM |
முதல் ஆராதனை | காலை | 06.45 AM - 07.15 AM |
இரண்டாவது ஆராதனை | காலை | 08.15 AM - 08.45 AM |
மூன்றாவது ஆராதனை | காலை | 09.45 AM - 10.15 AM |
நான்காவது ஆராதனை | காலை | 11.10 AM - 11.45 AM |
ஐந்தாவது ஆராதனை | மதியம் | 12.35 PM - 01.15 PM |
முதல் ஆராதனை | காலை | 6.00 AM - 7.15 AM |
இரண்டாவது ஆராதனை | காலை | 7.30 AM - 8.45 AM |
மூன்றாவது ஆராதனை | காலை | 9.00 AM - 10.15 AM |
நான்காவது ஆராதனை | காலை | 10.30 AM - 11.45 AM |
ஐந்தாவது ஆராதனை | மதியம் | 12.00 PM - 01.15 PM |
ஆறாவது ஆராதனை(வாலிபர்களுக்காக ) | மாலை | 05.00 PM - 06.00 PM |
ஏழாவது ஆராதனை(விடுதலைக்காக ) | மாலை | 06.30 PM - 07.45 PM |